இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமாக மட்டுமே இருந்த ஓலா சமீபத்தில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தியில் இறங்கி மிகப்பெரிய வர்த்தக விரிவாக்கத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் புதிதாக ஒரு துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.
அடுத்தடுத்த விரிவாக்கத் திட்டத்தால் ஓலா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் ஓலா நிறுவனம் தனது ஆன்லைன் டாக்ஸி சேவையில் சில நாட்களிலேயே போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியது.
இந்நிலையில் ஓலா தற்போது புதிதாக இறங்கியுள்ள துறையிலும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினால் ஸ்விக்கி, ஜியோமார்ட், டன்சோ போன்ற பல நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும்.
ஓலா நிறுவனம்
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஓலா நிறுவனம் ஆன்லைன் டாக்ஸி சேவையை எந்த அளவிற்கு மேம்படுத்தி ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதேபோல் தற்போது இந்தியா முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி சேலையில் ஓலா இறங்க முடிவு செய்துள்ளது.
மளிகை பொருட்கள் டெலிவரி
ஆனால் உணவு மற்றும் டாக்ஸி சேவையில் இந்தியா உச்சத்தை அடைந்துள்ள வேளையில், தற்போது மளிகை பொருட்கள் டெலிவரி சேவையில் போட்டி அதிகமாகியுள்ளது. ஆன்லைன் சேவையில் சிறந்து விளங்கும் குறிப்பாகப் போக்குவரத்துத் துறையில் சிறந்து விளங்கும் ஓலா இத்துறையில் இறங்குவது மூலம் அதிக லாபத்தைப் பார்க்க முடியும்.
ஹைபர்லோக்கல் பிக்அப் அண்ட் டிராப்
ஆம், ஓலா நிறுவனம் தற்போது தனது ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை வர்த்தகத்தை ஹைபர்லோக்கல் பிக்அப் அண்ட் டிராப் மாடலில் இயக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் மளிகை பொருட்களை டார்க்ஸ்டோர் அதாவது தனிப்பட்ட ஒரு நிறுவன கூட்டணி உடன் இதை செய்ய உள்ளது ஓலா.
டார்க்ஸ்டோர்
இந்த டார்க்ஸ்டோர் தான் மளிகை பொருட்களை ஆர்டரின் பெயரில் பொருட்கள் சேகரித்துப் பேக் செய்து வைக்கும். இந்தப் பணியை ஒரு முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் ஆன்லைன் மளிகை பொருட்களை டெலிவரியை கூட்டணி முறையில் செய்ய ஓலா முடிவு செய்துள்ளது.
பெங்களூர்
ஓலா இந்தப் புதிய சேவையை ஓலா ஸ்டோர் என்ற பெயரின் கீழ் பெங்களூரின் சில முக்கியப் பகுதிகளை மட்டும் குறிவைத்துத் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் வெற்றியின் மூலம் சேவை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய முடியும்.
மேலும் ஓலா ஸ்டோர் கீழ் மளிகை பொருட்கள் மட்டும் அல்லாமல் பர்சன்ல் கேர் மற்றும் பெட் கேர் பொருட்களையும் ஓலா விற்பனை செய்ய உள்ளது.
2வது முயற்சி
ஓலா மற்றும் உபர் ஆகிய நிறுவனங்களும் 5 வருடங்களுக்கு முன்பு இந்தச் சேவையை அறிமுகம் செய்து தோல்வி அடைந்தனர். ஓலா பிரம்மாண்ட ஐபிஓ வெளியிடும் நேரத்தில் 2வது முறையாக ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி சேவையில் இறங்கியுள்ளது. இந்த முறை வெற்றி அடைந்தால் ஐபிஓ-வில் பெரும் பலம் கிடைக்கும்.
பிக் பஜார், க்ராஃபர்ஸ்
ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி சேவையில் தற்போது டன்சோ, ஸ்விக்கி மட்டும் இல்லாமல் பிக் பஜார், க்ராஃபர்ஸ் ஆகியவையும் உள்ளது. சமீபத்தில் சோமேட்டோ இத்திட்டத்தில் இருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.
5 பில்லியன் டாலர் பிஸ்னஸ்
இந்திய சந்தையில் இதன் மொத்த வர்த்தத மதிப்பு 0.3 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில் அடுத்த 5 வருடத்தில் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகச் சந்தையை ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி சேவை உருவாக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில் ஓலா-வின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்கிலி - உதான்
இதற்கிடையில் பெங்களூரில் உதான் நிறுவனம் பிக்கிலி என்ற பெயரில் ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி சேவையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பல முன்னணி ரீடைல் கடைகள் குவிக் டெலிவரி சேவையில் இல்லை என்றாலும் ஆன்லைன் வர்த்தகப் பிரிவை தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.
ரீடைல் கடைகள்
உதாரணமாக கொரோனாவுக்கு முன்பு ஆன்லைன் டெலிவரி சேவையில் பெரிய அளவில் கவனம் செலுத்தாத டிமார்ட் தற்போது பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது, இதேபோல் பிக் பஜார் நிறுவனமும் பெரிய அளவில் ஆன்லைன் சேவைக்காக விரிவாக்கம் செய்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications