இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன விற்பனையாளராக இருக்கும் ஓலா கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர் மத்தியிலும், சமூக ஊடகங்கள் மத்தியிலும் அதிகப்படியான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இதேவேளையில் ஓலாவுக்கு இணையாக டிவிஎஸ் நிறுவனம் தனது விற்பனையை உயர்த்தியுள்ளது ஓலா முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது நிதிநிலையை மேம்படுத்திக்கொள்ள மீண்டும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா நிர்வாகம் கையில் எடுத்துள்ள இந்த பணிநீக்க சுற்றில் 500-க்கும் அதிகமான பணியாளர்கள் தங்களுடைய பணியை இழக்க நேரிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் லாபத்தை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளார் பாவிஷ் அகர்வால்.

இது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மேற்கொள்ளும் முதல் பணியாளர் குறைப்பு நடவடிக்கை அல்ல. 2022 செப்டம்பரில், ஐபிஓ-வுக்கு முன்னதாக, இந்நிறுவனம் இரண்டு முறை பணியாளர் குறைப்பு மற்றும் புதிய நியமனங்களை மேற்கொண்டது. அதே ஆண்டின் ஜூலை மாதத்தில், பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை, கிளவுட் கிச்சன் மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி ஆகிய மூன்று வணிக பிரிவுகளை மூடிவிட்டு, சுமார் 1,000 பணியாளர்களை நீக்கியது.
2025-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 38.5% அதிகரித்து ரூ. 1,240 கோடியை எட்டியது, இந்த அதிரடி வளர்ச்சி விற்பனை அதிகரிப்பால் ஏற்பட்டது. 2024-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 56,813 வாகனங்கள் விற்பனையான நிலையில், 2025-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் விற்பனை 98,619 வாகனங்களாக அதிகரித்தது.
இருப்பினும், ஓலா எலக்ட்ரிக் சில சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் குறைபாடுகள் உள்ளது குறித்து பல நுகர்வோர் புகார்கள் வந்துள்ளதால் விசாரணை தொடங்கியுள்ளது. இதேவேளையில் ஓலா நிறுவனம் 99% புகார்களைத் தீர்த்துவிட்டதாகக் கூறினாலும், பல புகார்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.
இந்த முறை பணிநீக்க சுற்றில் யார் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஓலா இதுவரையில் தெரிவிக்கவில்லை என்பதால் கிருஷ்ணகிரியில் உள்ள தொழிற்சாலையில் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications