டெல்லி: ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவையில் பிரபல நிறுவனமான ஓலா, இனி இந்தியாவில் சேவை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் பொருட்டு வெளிநாடுகளில் ஏப்ரல் மாதத்துடன் சேவைகளை நிறுத்திக் கொள்வதாக மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை செயலி மூலம் பதிவு செய்து பயன்படுத்த வழி வகை செய்த நிறுவனம் ஓலா. இந்தியாவில் வாடகை வாகன சேவையில் முன்னணியில் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டில் பிரிட்டன் , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கும் தங்களின் சேவையை விரிவுப்படுத்தியது. இந்த நிலையில் ஓலா நிறுவனம் அவற்றை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் தங்களுடைய நிறுவன செயல்பாடுகளை அதிகரிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் தங்கள் நிறுவனத்தின் சேவைகளை நிறுத்து இருப்பதாக ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஏப்ரல் மாத இறுதிக்குள் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் வழங்கி வந்த வாடகை வாகன சேவைகளை நிறுத்து போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் ஏப்ரலுடன் தங்கள் சேவையை நிறுத்தப் போவதாக தகவல் அளித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் ஓலா வாடகை செயலி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ஓட்டுநர்களுக்கும் இது தொடர்பான தகவல்களை தெரிவித்து வருவதாக ஓலா நிறுவனம் கூறியுள்ளது.
கூடிய விரைவில் ஓலா நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்காக ஐபிஓ வெளியிட வெளியிட உள்ளது. இதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வரும் ஓலா நிறுவனம், ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
அதே வேளையில் மின்சார வாகனம் தயாரிப்பிலும் , ஏஐ தொழில்நுட்பத்திலும் ஓலா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை வாய்ப்புகளையும், மின்சார வாகனங்களை கொண்ட வாடகை சேவைகளுக்கான வாய்ப்புகளையும் பயன்படுத்தி நிறுவனத்தை விரிவுபடுத்த ஓலா நிறுவனம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஓலா நிறுவனம், தனது துணை நிறுவனமான ஓலா ஸ்கூட்டரிடம் இருந்து 8,000 மின்சார இருசக்கர வாகனங்களை வாங்கி இருக்கிறது.இதன் மூலம் உள்நாட்டில் பைக் சேவைகளில் மின்சார வாகனங்களை ஈடுபடுத்துவதற்கான பணிகளில் ஓலா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
எனவே வெளிநாடுகளில் கவனம் செலுத்தி இந்திய சந்தையை விட்டு விடக் கூடாது என ஓலா நிறுவனம் கருதுகிறது. எனவே, முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விரைவில் ஐபிஓ அறிவிப்பு வெளியிட உள்ளது. அதேபோல ஓலா கேப்ஸும் கூடிய விரைவில் ஐபிஓ வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மின்சார வாகனங்கள் மீது கவனத்தை செலுத்த இருப்பதாக இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹேமந்த் பாக்சி கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
Story written by: Devika
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications