இந்தியாவில் ஆன்லைன் டாக்சி சேவையில் நீண்ட காலமாக கொடிக்கட்டி பறக்கும் ஓலா உடன் போட்டிப்போட முடியாமல் வர்த்தகத்தையும், லாப அளவீடுகளையும் இழுத்துப்பிடித்துக்கொண்டு உபர் இயங்கி வருகிறது. இதனால் ஓலா, உபர் எவ்விதமான போட்டியும் இல்லாமல் அதிகப்படியான ஆதிக்கத்துடன் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் கட்டணத்தையும் தாறுமாறாக உயர்த்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு உருவாக்கிய ONDC மூலம் மக்கள் குறிப்பிடத்தக்க சேவையை பெற்றாலும் ஆன்லைன் டாக்சி சேவையில் ஓலா, உபர் ஆதிக்கம் அசைக்க முடியாமல் தான் உள்ளது. இதேவேளையில் இத்துறையில் BLU, Namma Yatri போன்ற சில நிறுவனஙங்களும் வந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆட்டோ ஓட்டுனர்கள், ஆட்டோ உரிமையாளர்கள் மத்தியில் பெயரை கேட்டாலே கடுப்பாகும் ஒரு நிறுவனம் Rapido. இந்நிறுவனத்தின் பைக் டாக்சி சேவை மூலம் ஆட்டோ ஓட்டுனர்களின் வருவாய் அதிகப்படியாக பாதிப்பதாக குறை கூறி வந்தனர்.
இந்த நிலையில் பைக் டாக்ஸி சேவை மட்டுமே அளித்து வந்த Rapido செவ்வாய்கிழமை கார் டாக்ஸி சேவையில் நுழைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. நகர்ப்புற போக்குவரத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்துவதற்கும், அனைத்து பயணத் தேவைகளையும் மலிவு விலையில் நகரத்து மக்களுக்கு அளிப்பதை உறுதி செய்வதற்கும் ரேபிடோ உறுதி கொண்டு உள்ளதாகவும், இதன் பயணத்தில் தற்போது கார் டாக்ஸி சேவை வந்துள்ளது.
2015ல் அறிமுகமாக Rapido நிறுவனத்தின் பைக் டாக்சி சேவையில் தற்போது 60 சதவீத வர்த்தகத்தை கொண்டு உள்ளது, இதன் அடுத்தக்கட்டமாக 1 லட்சம் கார்களை இணைப்பதன் மூலம் இந்தியா முழுவதும் கார் டாக்ஸி சேவையை அளிக்கிறது. முதல்கட்டமாக டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் மட்டுமே கேப் சேவையை வழங்குகிறது Rapido நிறுவனம்.
Rapido நிறுவனத்தின் வருகை கட்டாயம் ஆன்லைன் டாக்சி சேவை துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வருவது உறுதி, காரணம் இதுவரையில் போட்டிகள் இல்லாமல் இருந்த வேளையில் முதல் முறையாக ஓலா, உபர் தாண்டி சிறிய நிறுவனங்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கட்டாயம் அடுத்த 6 மாதம் முதல் 18 மாதத்தில் ஆன்லைன் டாக்சி சேவையில் பெரும் மாற்றம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications