2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பல முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக புதிய வருமான வரிமுறையின் கீழ் அடிப்படை வருமான வரி வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனால் பலரும் எந்த விதமான வரிச் சலுகைகளும் இல்லை என்றாலும் வருமான வரி செலுத்தாமல் இருக்கலாம் என்பதற்காக புதிய வருமான வரியைத் தேர்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது.
ஆனாலும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அது என்னவென்றால் புதிய வரி முறையில் வீட்டு வாடகைப்படி, பிரிவு 80C, 80D-இன் கீழ் கிடைக்கும் வரிச் சலுகைகள் கிடையாது. அதோடு வீட்டுக் கடன் வட்டிக்கு கிடைக்கும் வரிச் சலுகையையும் பெற முடியாது.

பழைய வரி முறையின் முக்கியத்துவம்: 2025-ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு எந்த வரி முறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது? என்ற குழப்பத்தில் பல வரி செலுத்துவோர் குழம்பியுள்ளனர்.
இது குறித்து சார்டர்ட் அக்கவுண்டன் சுரேஷ் சுரானா கூறுகையில், பழைய மற்றும் புதிய வரி முறையின் கீழ் முடிவெடுக்கும் போது வீட்டு கடன் பெற்றிருப்பவர்கள் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது பழைய வரி முறையில் சொந்தமாக குடியிருக்கும் வீட்டின் கடனுக்கான வட்டிக்கு பிரிவு 24(b)-இன் கீழ் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்.
வாடகைக்கு விடப்பட்ட அல்லது வாடகைக்கு விடப்பட வேண்டிய வீடாக இருந்தால் இந்த வரம்பு கிடையாது. மேலும் 80C-இன் கீழ் வீட்டு கடனின் அசல் தொகைக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். கூடுதலாக முதல் முறையாக வீடு வாங்கி இருந்தால் வீட்டின் மதிப்பு மற்றும் கடனைப் பொறுத்து பிரிவுகள் 80EE அல்லது 80EEA இன் கீழ் கூடுதல் வரிச் விலக்குகளை பெறவும் வாய்ப்புள்ளது.
புதிய வரி விதிப்பு முறையின் முக்கியத்துவம்: பழைய வரி முறைக்கு நேர் மாறாக புதிய வரி முறையில் குறைந்த வரி விகிதங்கள் விதிக்கப்படுகிறது. ஆனால் வீட்டுக் கடன் சலுகைகள் போன்ற முக்கியமான வரிச் சலுகைகள் இதற்கு கிடையாது. எனவே நீங்கள் இன்னும் வீட்டுக்கு கடன் கட்டிக் கொண்டிருந்தால், அதுவும் குறிப்பாக கடனின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தால் பழைய வரி முறை உங்களுக்கு அதிக சேமிப்பை வழங்கும். வீட்டுக் கடனை முழுமையாக செலுத்தியவர்கள் அல்லது வீட்டுக் கடன் சலுகைகளை கோராதவர்கள் புதிய வரி முறையில் குறைந்த வரி விகிதங்களைப் பயன்படுத்தி பயனடையலாம்.
புதிய வரி முறையின் கீழ் வரி தள்ளுபடி உயர்வு: 2025-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் வந்த முக்கியமான மாற்றங்களில் இதுவும் ஒன்று. பிரிவு 87A - ன் கீழ் வரி தள்ளுபடி 25,000 ரூபாயிலிருந்து ரூ. 60,000-ஆக உயர்த்தப்பட்டது. நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்களில் இருக்கும் வரி செலுத்துவோர் இந்த புதிய வரி முறையின் கீழ் இந்தச் சலுகையைப் பெறலாம்.
பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையே தேர்வு செய்யும் போது உங்களுடைய வீட்டுக் கடன், வருமான நிலை, முதலீடு போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தேர்வு செய்யப்பட வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications