பழைய வரி நடைமுறை vs புதிய நடைமுறை எது சிறந்தது?

டெல்லி: மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி அடுக்கில் மாற்றங்களை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன . ஒருவேளை வருமான வரி அடுக்கில் மாற்றங்கள் ஏற்பட்டால் ஊதியதாரர்களுக்கு கிடைக்கும் டேக் ஹோம் ஊதியம் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பொதுவாகவே பட்ஜெட் என்பது நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டு விடும். ஒருவேளை பட்ஜெட்டில் ஏதேனும் வரிவிகித மாற்றங்கள், வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டால் தொடங்கக்கூடிய நிதி ஆண்டிலிருந்து அது அமலுக்கு வந்துவிடும். வரி செலுத்துவோரும் அதற்கு ஏற்ப திட்டமிடுவது சுலபமாக இருக்கும்.

பழைய வரி நடைமுறை vs புதிய நடைமுறை எது சிறந்தது?

ஆனால் இந்த முறை தேர்தல் ஆண்டாக அமைந்துவிட்டதால் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டையே பிப்ரவரி மாதம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தல் முடிவடைந்து தற்போது மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து நிர்மலா சீதாராமன் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். எனவே அவர் தற்போது முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த பட்ஜெட்டில் அவர் ஏதேனும் வருமான வரி அடுக்குகளில் மாற்றங்களை அறிவித்தால் அதன் செயல்பாட்டு காலம் என்பது ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது இந்த ஜூலையில் வரவிருக்கக்கூடிய பட்ஜெட்டில் அறிவிக்க போகும் வரி விகிதம் தொடர்பான மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் அது அமல்படுத்தப்படும் தேதி 2024 ஏப்ரல் 1ஆக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பில் ஏதேனும் புதிய வரி சலுகை அறிவிக்கப்பட்டால், அந்த நடைமுறையில் வரி தாக்கலை தேர்வு செய்தவர்களுக்கு உடனடியாக தங்களின் டிடிஎஸ் குறைக்கப்பட்டு கையில் கிடைக்கும் சம்பளம் உயரும் என்கின்றனர் நிபுணர்கள். ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரி அடுக்குகள் அல்லது விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டால் வரி செலுத்துவோரின் வரி கணக்கீடுகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏப்ரல் 5, 2023 தேதியிட்ட அறிக்கையின்படி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களிடமிருந்து அவர்களுக்கு பழைய வரி நடைமுறை வேண்டுமா அல்லது புதிய வரி நடைமுறையில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா என்ற தகவலை பெற வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்கென எந்த காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை ஊழியர்கள் எந்த வரிமுறை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை கூறவில்லை என்றால் நிறுவனங்கள் தாமாகவே புதிய வரி நடைமுறையில் கணக்கினை தாக்கல் செய்துவிடலாம்.

இந்த பட்ஜெட்டில் புதிய வரி நடைமுறையின் கீழ் தனிநபருக்கான வரி விதிப்பில் ஏதேனும் சாதகமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால் புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பழைய வரி நடைமுறையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு வரி கணக்கீடு மற்றும் வரி தாக்கல் உள்ளிட்டவற்றில் சிக்கலை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

புதிய வரிமுறையில் சாதகமான அம்சங்கள் இருக்கிறது எனவே புதிய வரி நடைமுறைக்கு மாற வேண்டும் என விரும்பினால் ஊழியர்கள் அதனை தாங்கள் பணி செய்யும் நிறுவனங்களிடம் கேட்கலாம், அவர்கள் இதனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் உங்களுக்கான ஃபார்ம் 16 உள்ளிட்டவற்றை வழங்கலாம்.

ஏற்கனவே பழைய வரி நடைமுறையை தேர்வு செய்த ஒரு ஊழியர் திடீரென புதிய வரி நடைமுறைக்கு மாற முடியுமா என்பது குறித்த தெளிவான விளக்கங்களை அரசு இதுவரை வழங்கவில்லை. இருந்தாலும் பழைய வரி நடைமுறையை தேர்ந்தெடுத்த வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் நேரத்தில் புதிய வரி நடைமுறைக்கு மாறுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இருந்தாலும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் முன்பு நிதி ஆலோசகர்களிடம் கலந்துரையாடுவது சிறந்தது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+