சென்னை: இந்தியாவைப் பொறுத்தவரை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வங்கி சேவைகள் கிடைத்து வருகின்றன. வங்கி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது எஸ்பிஐ, இந்தியன் பேங்க் உள்ளிட்டவைதான். ஆனால் இவை இந்தியாவின் பழமையான வங்கிகள் கிடையாது.
இந்தியாவிற்கு என பாரம்பரியமிக்க வங்கிகள் பல இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை மெட்ராஸ் மற்றும் கொல்கத்தாவில் நிறுவப்பட்டவை..

தி மெட்ராஸ் பேங்க்: இந்தியாவின் பழமையான வங்கி தி மெட்ராஸ் பேங்க். 1683 ஆம் ஆண்டு இந்த வங்கி நிறுவப்பட்டது. மெட்ராஸ் பிரசிடென்சியை தலைமை இடமாகக் கொண்டு இது செயல்பட்டு வந்தது. 1843 ஆம் ஆண்டு இது தன்னுடைய சேவையை நிறுத்திக் கொண்டது.
பேங்க் ஆப் பாம்பே: பாம்பேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது இந்த வங்கி. 1820 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் 1870 ஆம் ஆண்டிலேயே இந்த வங்கி மூடப்பட்டது.
பேங்க் ஆப் ஹிந்துஸ்தான்: கல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டது பேங்க் ஆப் ஹிந்துஸ்தான். 1770 ஆம் ஆண்டு இந்த வங்கி சேவைகளை வழங்க தொடங்கியது. 1832 களில் இந்த வங்கியின் சேவைகள் முடித்து வைக்கப்பட்டன.
ஜெனரல் பேங்க் ஆஃப் பெங்கால் அண்ட் பீகார் : கல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு 1873 ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே இந்த வங்கி மூடப்பட்டது. அதாவது 1775 ஆம் ஆண்டிலேயே ஜென்ரல் பேங்க் ஆப் பெங்கால் அண்ட் பீகாரின் சேவைகள் நிறுத்தப்பட்டன.
பெங்கால் பேங்க்: கல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட பெங்கால் பேங்க் 1784 ஆம் ஆண்டு சேவைகளை வழங்க தொடங்கியது. 1791 ஆம் ஆண்டிலேயே இந்த வங்கி மூடப்பட்டது.
ஜென்ரல் பேங்க் ஆப் இந்தியா : 1786 ஆம் ஆண்டு கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. 1791 ஆம் ஆண்டிலேயே இந்த வங்கியின் சேவையும் நிறுத்தப்பட்டது.
கர்னாடிக் பேங்க்: மெட்ராஸ் பிரசிடென்சியை தலைமை இடமாகக் கொண்டு கர்நாடிக் பேங்க் தொடங்கப்பட்டது. 1788 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி 1843 ஆம் ஆண்டிலேயே மூடப்பட்டது.
பிரிட்டிஷ் பேங்க் ஆப் மெட்ராஸ்: மெட்ராஸ் பிரசிடென்சியில் தொடங்கப்பட்ட மற்றொரு முக்கியமான வங்கி இது. 1895 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி பல்வேறு சேவைகளை வழங்கியது. இருப்பினும் 1843 ஆம் ஆண்டு இது மூடப்பட்டது.
தி ஏசியாட்டிக் பேங்க்: மெட்ராஸ் பிரசிடென்சியில் தொடங்கப்பட்ட மற்றொரு முக்கியமான வங்கி. இது 1804 சேவையை தொடங்கி 1843 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
பேங்க் ஆப் கல்கத்தா: கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு 1806-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி 1921 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது.
தி கமர்ஷியல் பேங்க்: கொல்கத்தாவில் 1819 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1828 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது.
தி கல்கத்தா பேங்க்: 1824 ஆம் ஆண்டு சேவையை தொடங்கிய இந்த வங்கி, 1828 ஆம் ஆண்டுடன் சேவையை நிறுத்திக் கொண்டது.
பேங்க் ஆப் இந்தியா: கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு 1828 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் வங்கி சேவையை வழங்கியது. இருப்பினும் ஓராண்டிலேயே அதாவது 1829 ஆம் ஆண்டிலேயே இதன் சேவைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.
தி யூனியன் பேங்க்: கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு தொடங்கப்பட்ட மற்றொரு முக்கியமான வங்கி. இது 1828 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1848 இல் மூடப்பட்டது.
தி கவர்மெண்ட் சேவிங் பேங்க்: கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட மற்றொரு முக்கியமான வங்கி இது. 1833இல் சேவையை தொடங்கி 1843 ஆம் ஆண்டு சேவையை முடித்துக் கொண்டது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications