உலகம் முழுவதும் இருக்கும் மக்களும், வர்த்தக துறைகளும் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது AI குறித்து பேசாமல் இருப்பது இல்லை, AI மூலம் ஒரு தரப்பு வேலைவாய்ப்பு பாதிப்பு ஏற்படும் என கூறும் வேளையில் மறுபுறம் ஏஐ பலருக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும் என விவாதித்து வருகின்றனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்து வேகமாக தெரிந்திக்கொண்டு தனது வேலை, எதிர்காலத்தை வலுப்படுத்திக்கொள்கிறார்கள். இதில் ஒருவர் தான் 32 வயதான ஓலே லெஹ்மன். அதிகளவிலான செயற்கை நுண்ணறிவு பயன்பாடு எந்தளவுக்கு நல்லது என்பதை உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், இன்றைய நிலை செயற்கை நுண்ணறிவு பணம் பார்க்கும் துறையாக மாறியுள்ளது.

32 வயதான சைப்ரஸ் நாட்டின் தொழிலதிபரான ஓலே லெஹ்மன் (Ole Lehmann) உலகின் மிகப்பெரிய கிரிப்டோ வர்த்தக தளமான FTX வீழ்ச்சி அடைந்த போது தன்னுடைய வாழ்க்கை மொத்தமாக மாறியது. FTX திவால் ஆன பின்பு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருந்த Ole Lehmann-க்கு ChatGPT கைகொடுத்தது.
இன்றைய நிலைக்கு செயற்கை நுண்ணறிவு துறையின் உச்சமாக பார்க்கப்படும் சாட்ஜிபிடி-ஐ குறைந்த காலத்திலேயே கற்றுக்கொண்டு, இதை உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக மாறினார். தற்போது வீட்டில் இருந்துக்கொண்டே வருமானம் ஈட்டும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளார்.

ஓலே லெஹ்மன் 6 வருடம் கிரிப்டோ டிரேடராகவும், முதலீட்டாளராகவும் பணியாற்றி FTX வீழ்ச்சிக்கு பின்பு மொத்தமும் பெரிய அளவிலான நிதி இழப்பை எதிர்கொண்டார். இந்த நிலையில் தான் செயற்கை நுண்ணறிவு துறையின் உச்சமாக பார்க்கப்படும் சாட்ஜிபிடி அவருக்கு கைகொடுத்துள்ளது.

சில மாதங்களிலேயே CHATGPT-யில் கைதேர்ந்தவராக மாறிய ஓலே லெஹ்மன், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் The AI Solopreneur என்ற டிவிட்டர் கணக்கை துவங்கினார். இதன் மூலம் தனியாக வர்த்தகத்தை துவங்கியிருக்கும் தொழிலதிபர்களுக்கு AI மூலம் தங்களுடைய productivity-ஐ எப்படி மேம்படுத்த முடியும் என்பது குறித்து டிப்ஸ் கொடுக்கும் வழிநடத்தும் சேவையை அளிக்கிறார். மேலும் AI குறித்து ஒரு கோர்ஸ் உருவாக்கியுள்ளார்.
டிவிட்டரில் 65 நாளில் 1 லட்சம் பாலோவர்கள், இதை தொடர்ந்து ஓலே லெஹ்மன் உருவாக்கிய கோர்ஸ்-க்கு 1078 பேர் ஆர்டர் செய்தது என சில மாதத்தில் வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து தற்போது ஒரு மாதத்திற்கு 176,885 டாலர் வரையில் சம்பாதிக்கிறார். இந்திய ரூபாயில் 1.4 கோடி ரூபாய்.


Click it and Unblock the Notifications