இந்தியாவின் முன்னணி ஆன்லைன் மார்கெட்பிளேஸ் மற்றும் கிளாசிபைட் தளமாக விளங்கும் OLX நெதர்லாந்து நாட்டின் Prosus கட்டுப்பாட்டில் உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்தியாவில் செகண்ட்ஹேண்ட் பொருட்களை வாங்க, விற்க அனைத்து தரப்பு மக்களின் முக்கிய தேர்வாக இருப்பது OLX தான்.
உலகில் பல நாடுகளில் இயங்கி வரும் OLX எடுத்துள்ள முக்கியமான மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு படியாக தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் OLX நிர்வாகம் சில முக்கிய நாடுகளில் தனது OLX Autos பிரிவை தனியாக விற்பனை செய்துவிட்டு வெளியேற முடிவும் செய்துள்ளது.

OLX Autos என்பது கார், பைக் விற்பனை செய்யும் பிரிவு, இந்திய வர்த்தக சந்தையை பொருத்தவரையில் OLX Autos முக்கியமான வர்த்தக பிரிவாக உள்ளது. OLX குரூப் அமெரிக்காவை தவிர்த்து சுமார் 30 நாடுகளில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட 800 ஊழியர்கள் எந்த நாட்டின் வர்த்தகத்தில் இருப்பவர்கள், எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நேரடியாக போனில் தொடர்பு கொண்டு பணிநீக்க செய்தி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
OLX குரூப் முன்பு வர்த்தக பிரிவுகளை மொத்தமாக சர்வதேச அளவில் விற்பனை செய்ய முடிவு செய்தது. ஆனால் இது சாத்தியமாகாத காரணத்தால் சந்தை அடிப்படையில் வர்த்தகத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் படி சிலி நாட்டின் நிதியியல் வர்த்தகத்தையும், இந்தியா, இந்தோனேஷியா, துருக்கி ஆகிய பகுதிகளில் இருக்கும் கிளாசிபைட் மற்றும் ஆட்டோஸ் வர்த்தகத்தை விற்க உள்ளது. இதேபோல் அர்ஜென்டினா, மெக்சிகோ மற்றும் கொலம்பியா ஆகிய சந்தையில் முதலீட்டாளர்கள், விற்பனையாளர்கள் இல்லாத காரணத்தால் மொத்தமாக மூடவும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications