சென்னை: ஜமீந்தாரி முறை ஒழிப்பு, தேவதாஸி முறை ஒழிப்பு, மாநில பொருளாதார ஆலோசகர் என 1947களிலேயே பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்த மெட்ராஸ் மாகாணத்தின் தவிர்க்க முடியாத தலைவர்.
மெட்ராஸ் மாகாணம் பல்வேறு முதல்வர்களை சந்தித்து இருக்கிறது அவர்களின் பெரிய அளவில் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நபர்தான் ஓமந்தூர் பி ராமசாமி ரெட்டியார். பிப்ரவரி 1ஆம் தேதி அவருடைய 130 வது பிறந்த தினம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து மாகாண தலைவராக உயர்ந்தவர்.

1947 மார்ச் 23 முதல் 1949 ஏப்ரல் 6ஆம் தேதி வரை மெட்ராஸ் மாகாணத்தின் தலைவராக பதவி வகித்தார் . 1895 ஆம் ஆண்டு ஓமந்தூர் கிராமத்தில் பிறந்த இவர் திண்டிவனத்தில் இருந்த ஆற்காடு அமெரிக்கன் மிஷன் பள்ளியில் கல்வி பயின்றார். தற்போது அனைவராலும் கொண்டாடப்படும் சங்கராச்சாரியார் சரஸ்வதி சுவாமிகள் அப்போது ஓமந்தூர் பி ராமசாமி ரெட்டியாரின் பள்ளி தோழன்.
சுதந்திரப் போராட்ட வீரரான ஓபிஆர் இரண்டு ஆண்டு காலம் மட்டுமே மெட்ராஸ் மாகாணத்தின் தலைவராக பதவி வகித்தார். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்.
இந்தியா எனும் நாடு ஆங்கிலேயர்களுடன் போராடும் அதே வேளையில் சமூகத்திற்குள் ஊறிக்கிடக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் சமமாக எடுத்து போராட வேண்டும் என்பதை அப்போதே உணர்ந்தவர் இவர். இவருடைய ஆட்சியில் தான் மெட்ராஸ் கோயில் நுழைவு அனுமதிச்சட்டம் 1947 கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அனைத்து இந்துக்களும் அனைத்து கோயில்களுக்கும் சுதந்திரமாக சென்று வரலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
தமிழ்நாட்டில் கோயில் நுழைவு இயக்கத்தில் இந்த சட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பு வரை குறிப்பிட்ட ஜாதியினர் கோயில்களுக்குள் செல்வதற்கு தடை இருந்தது. அதனை தகர்த்து எறிந்தவர் தான் இவர். அதேபோல மெட்ராஸ் தேவதாசி சட்டத்தையும் தன்னுடைய ஆட்சி காலத்தில் கொண்டு வந்து மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்.
இதன் மூலம் தேவதாசிகள் தங்களுக்கு பிடித்த நபருடன் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை பெற்றனர். அதேபோல கோயில்களுக்கு என அவர்களை நேர்ந்துவிடும் நடைமுறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஜமீன்தாரி ஒழிப்பு முறை சட்டத்தை கொண்டு வந்த பெருமையும் இவரையே சாரும். இது மாநிலத்தின் சமூக பொருளாதார சூழலையே மிகப்பெரிய அளவில் மாற்றி அமைத்தது. 1948 ஆம் ஆண்டிலேயே மாநிலத்திற்கு என தனி சின்னத்தை கொண்டு வந்த பெருமை இவரையே சாரும்.
அப்போது இந்து சமய அறக்கட்டளை சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவரும் இவர்தான். இதன் மூலம் கோயில் நகைகளை பாதுகாக்கவும் பராமரிக்கவும் கோயில் சொத்துக்களை முறையாக கையாளவும் பதிவு முறையை கொண்டு வந்தார். இதற்கு பல்வேறு கோயில் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று அதனை நடைமுறைப்படுத்தினார்.
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும்பங்காற்றியவர் இவர். ஹைதராபாத்துக்கு பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன என்ற தகவலை அறிந்த இவர் சென்னை மாகாணத்தை காப்பாற்றுவதற்காக கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஆலையில் ஆயுத தயாரிப்பிலும் ஈடுபட்டார்.
அப்போது நேரு இவரிடம் ஏன் ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டீர்கள் என கேள்வி எழுப்பியபோது தேச பாதுகாப்புக்காகவே தான் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.
மாநிலம் முழுவதும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்திய பெருமை இவரையே சாரும். இதனால் ஒரே நாளில் சென்னை மாகாண முழுவதிலும் இருந்த கள்ளுக்கடைகள் இழுத்து மூடப்பட்டன. திட்ட கமிஷன் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாகவே மாநிலத்திற்கு என ஒரு பொருளாதார ஆலோசகரையும் புள்ளியில் துறையையும் நியமனம் செய்தவர் தான் ஓபிஆர்.
விவசாயிகளுக்கு வேளாண் காப்பீடு திட்டங்கள் தேவை அப்போதே கூறியவர். இவருடைய தொலைநோக்கு பார்வையும் திட்டங்களும் மெட்ராஸ் மாகாணத்தை சமூக நீதி பாதையில் கொண்டு செல்ல வித்திட்டது. இதனால் தான் இன்றளவும் தமிழகம் பல துறைகளிலும் தனித்து நிற்கிறது. அவருடைய பிறந்தநாளில் அவரின் பெருமைகளை நினைவுகூர்வது மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications