சென்னை: OMC நிறுவனங்கள் மே 1ஆம் தேதியான இன்று, எல்பிஜி கமர்ஷியல் சிலிண்டரின் விலையை நிர்ணயித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் 19 கிலோ எல்பிஜி கமர்ஷியல் சிலிண்டரின் விலையை ரூ. 19 ரூபாய் குறைத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை இரண்டு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், மீதம் உள்ள இடங்களில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஓஎம்சி நிறுவனங்கள் திடீரென சிலிண்டர் விலையில் மாற்றத்தை செய்துள்ளனர். இதன் மூலம் ஆளும் கட்சியின் பக்கம் மக்களின் அலை திரும்புமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள், எரிவாவு சிலிண்டரின் விலையை நிர்ணயிக்கும். அதன்படி மே 1ஆம் தேதியான இன்றும் OMC நிறுவனங்கள், எல்பிஜி கமர்ஷியல் சிலிண்டரின் விலையில் மாற்றங்களைச் செய்துள்ளது. அதாவது ஹோட்டல்களில் சமைக்க பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களைத் தான் கமர்ஷியல் சிலிண்டர் என்று அழைக்கிறோம்.
மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை உட்பட நாடு முழுவதும் 19 கிலோ எடையுள்ள கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.
மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை உட்பட இந்த விலை குறைப்பை எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை அன்று அறிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் கமர்ஷியல் சிலிண்டரின் விலை: டெல்லியில், எல்பிஜி கமர்ஷியல் சிலிண்டரின் விலை ரூ.19 குறைக்கப்பட்டுள்ளது. இது முன்பு ரூ.1,764.50 ரூபாயாக இருந்தது. தற்போது ரூ.1,745.50 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், மும்பையில் ரூ.19 குறைக்கப்பட்டு, ரூ.1,698.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சென்னையில் கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,911 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.19 குறைக்கப்பட்டு ரூ.1,859 ஆக உள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை மூன்று நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவதால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது. தெருவோரத்தில் தள்ளுவண்டிகளில் ஹோட்டல் வைத்து நடத்தும் சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில், இந்த விலை குறைப்பு உள்ளது.
மேலும் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இது ரூ. 818.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் இந்த விலையும் மாறுபடக்கூடும்.
அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.75 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.34 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சில நாட்களாக சிலிண்டர் விலை அதிகரிப்பின் காரணமாக ஹோட்டல்களில் அதிக விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்த கமர்சியல் சிலிண்டர்களில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பின் காரணமாக வரும் நாட்களில் உணவுகளின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications