சமுக வலைத்தளத்தின் வளர்ச்சியைப் பார்க்கும் போதும் பிரமிக்க வைக்கிறது, 20 வருடத்திற்கு யாஹூ சாட் ரூம் இளம் தலைமுறையினரை அதிர்ச்சியில் மூழ்கடித்தது. இதன்பின்பு வந்த ஆர்குட், பேஸ்புக், டிவிட்டர், ஸ்னாப்சாட் எனப் பல சேவைகள் வந்தது. ஆனால் பல வருடமாக Omegle என்ற தளம் பயன்பாட்டில் இருந்தது மட்டும் அல்லாமல் இதைத் தொடர்ந்து பெரும் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் Omegle வீடியோக்கள் பல யூடியூப் ஷாட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகியவற்றில் டிரெண்டானது மூலம் இந்தியாவிலும் உலக நாடுகளில் இளசுகள் முதல் பெருசுகள் வரையில் Omegle பக்கம் செல்ல துவங்கினர். இது கிட்டத்தட்ட யாஹூ சாட் ரூம் போலவே, உலகின் மறுமுனையில் இருப்பார்களை வீடியோ சாட் மூலம் பேசக்கூடிய சேவையை அளிக்கிறது Omegle.

இந்த நிலையில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பல தரப்பு மக்களுக்குப் பல விதமான சேவைகளை வழங்கிய Omegle தற்போது மூடப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் Leif K-Brooks புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தார். இது மட்டும் அல்லாமல் இந்தச் செய்தியை Omegle இணையத் தளத்தில் நுழையும் போதே இவ்வறிக்கையைக் காட்டப்பட்டுத் தனது வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
Omegle தளத்தை இயங்குதளத்தை நிர்வகிப்பதற்கும், மக்கள் அதனைத் தவறான முறையில் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராடுவதற்கும் செலவுகள் அதிகமாகிவிட்டதால், இதைச் சமாளிக்க முடியாத காரணத்தால் Omegleஐ தொடர்ந்து நிதி ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் இயக்குவது முடியாத ஒன்றாக மாறியுள்ளது Leif K-Brooks தனது அறிக்கையில் தெரிவித்தார்.
Omegle தளத்தை 18 வயதாக இருக்கும் போது Leif K-Brooks உருவாக்கி மார்ச் 2009ல் இணையத்தில் லைவ் செய்தார், அறிமுகம் செய்த ஒரு மாதத்தில் 150000 பேர பயன்படுத்தினர். இன்று இந்த எண்ணிக்கை பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அப்போதைய காலகட்டத்தில் ஒரு புதிய இணையதளத்தில் பெரிய எண்ணிக்கை தான். மார்ச் 2010ல் தற்போது நாம் பயன்படுத்தும் வீடியோ டெலிபோனி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
2019-20ல் Omegle தளத்திற்குச் சீனாவில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது, கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தியா முதல் உலகின் பல நாடுகளில் Omegle பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நேரமும் ராக்கெட் வேகத்தில் வளர்ந்தது. இந்தத் தளம் ஆபாச பேச்சு, ஆபாசி வீடியோ சேட்டிங் போன்ற பல தவறான விஷயங்களுக்கு அதிகப் பயன்படுத்தப்பட்டது.
முதலில் Omegle தளத்தை 13 வயதுக்கு மேல் இருப்போர் பயன்படுத்தத் தகுதி உடையவராக இருந்த நிலையில் 2022ல் இது 18 வயது வரம்பு என்ற நிலையை அடைந்தது. அடுத்த ஒரு வருடத்தில் நிதி நெருக்கடிகள் காரணமாக மூடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications