இந்தியாவில் நாளுக்கு நாள் ஓமிக்ரானின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது இன்னும் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற வழிவகுக்கிறது. இது இன்னும் கொஞ்ச காலத்திற்கு ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் தற்போது ஓர்க் பிரம் ஹோம் மாடலை பின்பற்றத் தொடங்கியுள்ளன.
ஐடி துறையில் முன்னணி நிறுவனமான காக்னிசண்ட் முதல் ஈ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் வீட்டில் இருந்து பணியாற்ற கூறியுள்ளன.
டிசிஎஸ்-ன் திட்டம்
நாட்டின் மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் ஜனவரி முதல் 50 - 70% ஊழியர்களுடன் அலுவலகத்தினை திறக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை மீண்டும் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையில் அதிகாரிகள் ஹைபிரிட் மாடல் பணியினை அமல்படுத்த கூறி வருகின்றனர்.
டெல்லி-யில் கட்டுப்பாடுகள்
ஜனவரி 11 முதல் DDMA டெல்லியில் தனியார் அலுவலகங்களை தற்காலிகமாக மூட கூறியுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.
ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம்
முன்னதாக நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தில், கடந்த மாதம் 90% ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தனர். ஆனால் ஜனவரி மாதம் அலுவலகம் திரும்ப இருந்த நிலையில், ஊழியர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என கருதி மீண்டும் வீட்டில் இருந்தே பணியாற்ற கூறியுள்ளது.
காக்னிசண்ட்
இதே போல மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட் , அதன் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறியுள்ளது. இது அதன் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், ஊழியர்களின் குடும்பத்தினர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரின் பாதுகாப்பு முக்கியம். ஆக நிலைமைக்கு ஏற்ப கண்கானித்து முடிவெடுக்கலாம் என்றும், ஏப்ரல் மாதத்தில் சூழ்நிலைகள் சரியாக இருந்தால் மீண்டும் திறக்கலாம் என தெரிவித்துள்ளது.
ஹெச்.சி.எல் டெக்
ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனம் கொரோனா பரவலை கண்கானித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஆக தாக்கம் குறையும்போது அலுவலகத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் நிலைமை சீரடையும் வரையில் ஹைபிரிட் மாடலை பின்பற்றபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ்
ஆக பல நிறுவனங்களும் ஹைபிரிட் மாடலையே கடைபிடித்துக் வருகின்றன. நடப்பு ஆண்டில் இந்த நிலை இப்படியே தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக கொரோனாவின் தாக்கம் குறைந்து, தடுப்பூசி விகிதம் அதிகரித்து, நிலைமை சீரடையும்போது ஊழியர்களை இன்ஃபோசிஸ்அலுவலகத்திற்கு அழைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு ஊழியர்கள்
முன்னதாக மத்திய அரசு ஊழியர்களில் 50% பேர் வீட்டில் இருந்து பணியாற்ற கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்றலாம். மேலும் தொற்று அதிகமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஊழியர்கள், வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications