உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் ஒமிக்ரான், பணவீக்கம்.. உலக வங்கியின் கணிப்பு..!

உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று, ஒமிக்ரான் மற்றும் புதிதாக உருவாகி இருக்கும் கொரோனா வேரியன்ட், அதிகரித்து வரும் பணவீக்கம், வருமான சரிவு ஆகியவற்றின் மூலம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்படும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2021-இல் 5.5 சதவீதமாக இருந்த சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீடு 2022 இல் 4.1 சதவீதமாகக் குறையும், இதைத் தொடர்ந்து 2023 இல் 3.2 சதவீதமாகக் குறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

 பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

2020ல் கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும், தற்போது புதிய பாதிப்புகள் உடன் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்டு உள்ள தாக்கம் வளரும் நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை உருவாக்கும். இதேபோல் கடன், பணவீக்கம், வருமான சரிவு ஆகியவை பொருளாதார வளர்ச்சியை மந்த நிலைக்குத் தள்ளும் எனக் கணித்துள்ளது.

 ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ்

கொரோனா வைரஸ் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இது கொரோனா பாதிப்பு போல் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், பொருளாதார வளர்ச்சி அளவீட்டை கடுமையாகப் பாதிக்கிறது.

 அமெரிக்கா மற்றும் சீனா

அமெரிக்கா மற்றும் சீனா

அமெரிக்கா மற்றும் சீனா உட்படப் பெரும் பொருளாதார நாடுகளில் குறிப்பிடத்தக்கச் சரிவும், வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதார நாடுகளில் இந்த ஒமிக்ரான் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதேபோல் பணவீக்கம் பொருளாதாரச் சரிவில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

 வளர்ச்சி அளவீடு

வளர்ச்சி அளவீடு

பெரிய பொருளாதார நாடுகளில் வளர்ச்சி அளவீடு 2021ல் 5 சதவீதத்தில் இருந்து 2022ல் 3.8 சதவீதமாகவும், 2023ல் 2.3 சதவீதமாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதார நாடுகளில், வளர்ச்சி 2021ல் 6.3 சதவீதத்தில் இருந்து 2022ல் 4.6 சதவீதமாகவும், 2023ல் 4.4 சதவீதமாகவும் குறையும் என என உலக வங்கி கணித்துள்ளது.

 2023 டார்கெட்

2023 டார்கெட்

2023 ஆம் ஆண்டுக்குள், அனைத்து பெரும் பொருளாதார நாடுகளும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை முழுமையாக மீட்டெடுக்கும்; ஆனால் வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதார நாடுகளில் 2023ஆம் ஆண்டிலும் கொரோனா தொற்றுக்கு முந்தைய அளவீட்டை விடவும் 4 சதவீதம் குறைவாகவே இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+