இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றுக் காரணமாக ஏற்கனவே எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி அளவீட்டை அடைய முடியாமல் இருக்கும் இந்திய பொருளாதாரம் ஜனவரி - மார்ச் காலாண்டில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல் மக்களின் வாழ்க்கை முறையும் கொரோனா, ஒமிக்ரான் பரவல் மூலம் பாதிக்கப்படும்.
இந்தியா ரேட்டிங்க் அண்ட் ரிசர்ச்
இந்தியா ரேட்டிங்க் அண்ட் ரிசர்ச் அமைப்பு வெளியிட்டுள்ள கணிப்பின் படி இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக ஜனவரி - மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.40 சதவீதமும், 2022ஆம் நிதியாண்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் 0.10 சதவீதமும் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
மத்திய மாநில அரசுகள்
இது மத்திய மாநில அரசுகள் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை அளிக்கப்பட்ட பின்பு வெளியான கணிப்புத் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றுக் கட்டுப்படுத்த முடியவில்லை எனில் கட்டாயம் பொருளாதாரப் பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கும்.
கொரோனா தொற்று
இதேவேளையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல வர்த்தகக் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. உதாரணமாக வார இறுதி நாட்களில் முழுக் கட்டுப்பாடு, 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி, பொதுச் சந்தைகள், வர்த்தக இடங்களில் கட்டுப்பாடு ஆகியவை வர்த்தகத்தைப் பாதிக்கும் முக்கியக் காரணியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது இந்தியா ரேட்டிங்க் அண்ட் ரிசர்ச் அமைப்பு.
ஜனவரி - மார்ச் காலாண்டு
ஜனவரி - மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் 6.1 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு மூலம் 0.4 சதவீதம் குறைந்து 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் நிதியாண்டின் மொத்த ஜிடிபி வளர்ச்சியும் 9.3 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications