Tesla: 'டிசம்பர் 25'-ல் திவாலாகி இருக்க வேண்டும் தெரியுமா.. ஜஸ்ட் மிஸ்..!

இன்று உலகம் முழுக்கக் கொண்டாடிக்கொண்டு இருக்கும் டெஸ்லா நிறுவனம் 2008 இதே டிசம்பர் 25 கிறிஸ்மஸ் நாளில் மொத்தமாகத் திவாலாகி நிறுவனம், தொழிற்சாலை என அனைத்தையும் மூடப்பட்டு இருக்க வேண்டும், ஆனால் கடைசி நேரத்தில் தப்பித்த கதை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா சர்வதேச ஆட்டோமொபைல் துறையை மொத்தமாகப் புரட்டிப்போட்ட ஒரு அட்டகாசமான நிறுவனம், இன்று பில்லியன் டாலரில் வர்த்தகம், டிரில்லியன் டாலர் மதிப்பீடு, 240 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க்-ம் டெஸ்லா-வும் வியந்து பார்க்கப்படுகிறது.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் துவக்கம் இப்படிப் பிரம்மாண்டமாக ஒன்றும் இல்லை, எலான் மஸ்க் தனது நிறுவனத்தைப் பேபால் நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டு மொத்த பணத்தையும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்தார்.

 டெஸ்லா ஸ்பேஸ்எக்ஸ்

டெஸ்லா ஸ்பேஸ்எக்ஸ்

இரண்டு நிறுவனமே வரலாறு காணாத மாற்றத்தை உருவாக்கும் ஐடியாவை கொண்டது, இதனால் குறைந்த காலகட்டத்தில் யாராலும் பிரம்மாண்ட வளர்ச்சியைக் காட்ட முடியாது.

இதனால் புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பது மிகவும் சிரமமான விஷயம் அப்போது தான் வந்தது பெரும் பிரச்சனை.

 

 டிசம்பர் 25, 2008

டிசம்பர் 25, 2008

டிசம்பர் 25, 2008 கிறிஸ்மஸ் தினத்தில் முதலீட்டைத் திரட்டியே ஆக வேண்டும் என்ற நெருக்கடி, ஆனால் கிறிஸ்மஸ் அன்று முதலீட்டாளர்கள் முதல் பெரிய நிறுவன தலைவர்கள் வரையில் அனைவரும் விடுமுறையில் இருக்கும் நேரம்.

 ஜீரோ பேலென்ஸ்

ஜீரோ பேலென்ஸ்

ஏற்கனவே எலான் தன்னிடம் இருக்கும் அனைத்துப் பணம், வீடு, கார் வரையில் விற்பனை செய்து பணத்தை முதலீடு செய்துள்ள நிலையில், தான் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை கூட நண்பர்களிடம் இருந்து கடனாகப் பெற்றுத் தான் கட்டும் நிலை.

 கிறிஸ்மஸ் தினம்

கிறிஸ்மஸ் தினம்

ஆனால் கிறிஸ்மஸ் தினத்தின் மாலை 6 மணிக்கு முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஒப்புதல் அளித்தனர். இல்லையெனில் ஊழியர்களுக்கான சம்பளம் கூடக் கொடுக்க முடியாமல் நிறுவனம் திவாலாகி இருக்கும்.

இதை மறக்க முடியாத வருடமாக எலான் மஸ்க் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 இன்று டெஸ்லா

இன்று டெஸ்லா

இன்று டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2021ல் மட்டும் 46.21 சதவீதம் அதிகரித்து 1,067 டாலருக்கும், 1.07 டிரில்லியன் டாலர் மதிப்பீடு உடன் கெத்தாக உள்ளது. இதைவிட முக்கியம் எலான் மஸ்க் 274.0 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்குகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+