பெங்களூரு: மெட்ரோபொலிட்டன் நகரங்களில் வாழ்க்கைச் செலவு சற்று அதிகம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். குறிப்பாக, வீட்டை விட்டு வேலைக்காக வெளியூர்களுக்கு செல்லும் நபர்கள், தங்கள் சம்பளத்தில் பெரும்பகுதியை வாடகைச் செலுத்த செலவழிக்க வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக மும்பை, நாட்டிலேயே செலவு மிகுந்த நகரங்களில் ஒன்றாகும். குறைந்த வருமானத்தில் இங்கு வாழ்வது மிகவும் கடினம்.
அண்மையில், மும்பையில் வசிக்கும் ஒரு வழக்கறிஞர், தற்போது அங்கு வசூலிக்கப்படும் வாடகைக் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மும்பையில் ஒரு படுக்கையறை (1 BHK), ஹால், சமையலறை கொண்ட வீட்டிற்கு வாடகையாக ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை செலுத்த வேண்டியிருக்கும் என்றும், குடும்பத்துடன் இருப்பதே நல்லது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மும்பையில் வீட்டு வாடகை யின் அதிகரிப்பைக் குறித்து "விதா" என்ற பெண் கூறியுள்ளதாவது, மும்பையில் ரூ. 50,000 முதல் 70,000-த்தில் 1 BHK வீட்டை வாடகைக்குப் பெறலாம். உங்கள் அம்மா மற்றும் அப்பாவுடன் இருங்கள். சுதந்திரமாக இருப்பதற்காக உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என்று அவர் X பிளாட்பார்மில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. மேலும் விவாதத்தைத் தூண்டியது. பல பயனர்கள் மும்பையில் குறைந்த செலவில் இருக்கும் வீடுகளை அவருக்கு பரிந்துரைத்தனர்.
அவருடைய போஸ்டில் ஒரு பயனர், "அந்தேரி அல்லது கோரேகான் பகுதிகளில் தேடுங்கள். அங்கு உங்கள் பட்ஜெட்டில் வீடு கிடைக்கும். பாந்திராவில் குறைத்த விலையில் கிடைக்காது. இல்லையெனில், வேறு யாரோடு சேர்ந்து 2 BHK வீட்டைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் செலவைக் குறைக்க முடியும்" என்று கருத்து தெரிவித்தார்.
மற்றொரு நபர், "முன்னர் 2 BHK வீட்டிற்கு ரூ. 5,000 வாடகை கொடுத்தேன், இப்போது 2 BHK வீட்டிற்கு 48,000 கொடுக்கிறேன். முடிந்தால், உங்கள் இருப்பிடத்தை மாற்றிப் பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த போஸ்டில் இன்னொரு பயனர் நகைச்சுவையாக 1 BHK வீடு ரூ. 30,000 ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால் இரவு நேரங்களில் சிலர் பாடும் சத்தம் கேட்கும். மேலும் விசாரிக்க என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று எழுதியுள்ளார்.
விதா பதிவிட்டுள்ள போஸ்ட் சுமார் 1.5 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது மற்றும் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
சமீபத்திய அனாரோக் தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் 3.5 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.15 சதவீத வாடகை விகிதம் மும்பையில் அதிகரித்துள்ளது. இது சுமார் 19% வளர்ச்சியாகும்.


Click it and Unblock the Notifications