இந்தியாவில் பண்டைய காலத்தில் இருந்தே ஆயுர்வேத மருத்துவ முறை இருந்து வருகிறது. உலகளவில் பல கோடி மக்கள் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகளுக்கு ஆயுர்வேதம் சென்று விட்டாலும் அதன் வேர்களைப் பார்த்தால் இந்தியாவுக்குத்தான் இட்டு வருகின்றன.
கொல்கத்தாவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் டாபர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிதியாண்டில் ரூ.3240 கோடியை வருமானமாக டாபர் பெற்றுள்ளது, சுமார் 100000 கோடி ரூபாய் மதிப்பீட்டை பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பர்மன் குடும்பம் தான் டாபர் நிறுவனத்துக்கு முன்னோடி. ஆயுர்வேத மருத்துவரான எஸ்கே பர்மன் டாபர் நிறுவனத்தை கடந்த 1884 ஆம் ஆண்டில் தொடங்கினார். குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான மலிவான சிகிச்சையை வழங்குவது தான் பர்மனின் நோக்கமாகும்.
காலரா, மலேரியா, பிளேக் போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கு இயற்கையான மருத்துவ சிகிச்சையை மேம்படுத்தி வழங்குவதற்கான பணிகளை பர்மன் செய்து வந்தார். விரைவில் அவரது சேவையை மக்கள் புரிந்து கொண்டனர். குறைந்த மருத்துவச் செலவில் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு அவர் சிகிச்சை அளித்து வந்தார்.
இப்படியே அவர் டாக்டர் பர்மன் என்று பிரபலமடைந்தார்.
139 ஆண்டுகால பெருமை வாய்ந்த டாபர் பிராண்டுதான் முதன் முதலில் ஆயுர்வேத மருத்து ஆய்வுக் கூடத்தை அமைத்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் காரணமாக டாபர் நிறுவனம் தனது இருப்பிடத்தை டெல்லிக்கு மாற்றிக் கொண்டது. கொல்கொத்தாவின் நஷ்டம் டெல்லிக்கு லாபம்.
டாபர் நிறுவனத்தில் தற்போதைய தலைவர் டாக்டர் ஆனந்த் பர்மன் டாக்ட்ரேட்டை முடிக்க உள்ளார். அவரது செயல்பாடுகள் அபாரமானது. அவர் வேலையில் சேரும்போது கம்பெனியின் வருமானம் ரூ.20 கோடி. 1990களில் ரூ.100 கோடி வருமானத்தைப் பெற்றது. இதுபற்றி ஆனந்த் பர்மன் கூறுகையில் நான் எனது பெரியப்பா ஜிசி பர்மனிடம் கற்றுத் தேர்ந்தேன். பெரிய அளவில் தொழில் நடத்துவதற்காக மெக்கின்சியுடன் கைகோர்த்துள்ளோம் என்றார்.
நிறுவனத்தின் தற்போதைய துணைத்தலைவரான அமித் பர்மனும் ஆனந்த் பர்மனும் குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையினர் ஆவர். 1998 ஆம் ஆண்டில் நிறுவனத்தை நிபுணர்கள் வசம் தந்தபோது இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் நிர்வாகத்தையும் நிபுணர்களையும் தனித்தனியாக ஆக்கிய நிறுவனம் என்ற பெருமையை டாபர் பெற்றது.
2007இல் டாபர் புட்ஸ் தொடங்கப்பட்டு டாபர் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாபர் இந்தியாவுக்கு அமித் பர்மன் துணைத்தலைவரானார். 2019இல் தலைவர் ஆனார். நிறுவனத்தின் உணவுச் சங்கிலி திட்டத்துக்கு முக்கியப் பணியை ஆற்றினார்.
இதன் மூலம் காஜியாபாத்தில் ஆயுர்வேத பேக்கேஜ்டு புட் கம்பெனி தொடங்கப்பட்டது. ஹோட்டல் துறையில் பர்மன் குடும்பத்தாரின் பங்கு கணிசமாக உயர்ந்து லைட் பைட் புட்ஸ் நிறுவனம் உயரத்துக்கு வந்தது. டாபர் நிறுவனத்துக்குச் சொந்தமானவை வாடிக்கா ஹேர் ஆயிர், ரியல் ஃபுரூட் ஜூஸ்கள், ஹாஜ்மோலா டைஜஸ்டிவ் மிட்டாய்.
2022ஆம் ஆண்டில் பர்மன் குடும்பம் இந்தியாவின் 17ஆவது பணக்காரக் குடும்பம் ஆனது. போர்ப்ஸ் தகவல்படி 9.6 பில்லியன் டாலர்கள் இதன் நிகர சொத்த மதிப்பு ஆகும். இந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் டாபர் நிறுவனத்தின் நிகர லாபம் 5 சதவீதம் உயர்ந்து ரூ.464 கோடி வளர்ச்சியடைந்தது. கடந்த காலாண்டில் ரூ.440 கோடி பெற்றது.
இந்த நிதியாண்டில் டாபர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.3240 கோடியாகவும் கடந்த நிதியாண்டு இதே காலகட்டத்தில் 2,943 கோடியாகவும் இருந்தது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications