ஒரே இன்ஸ்டாகிராம் ரீல்.. ஓஹோ என மாறிய வாழ்க்கை..!! 2 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்..!!

சமூகவலைதளங்கள் நினைத்தால் ஒருவரை ஒரே நாளில் கோபுரத்தில் அமர வைத்து விடும். அப்படி இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு ரீல் ஒரு 2 வயது சிறுவனின் வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது.

மகாராஷ்டிராவின் யவத்மால் பகுதியை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ருத்ரான்ஷ் சிங் தாக்கூர். தன்னுடைய சுட்டித்தனத்தால் நெட்டிசன்கள் மனதை கவர்ந்த அந்த சிறுவனை போண்டு பச்சா (Bhondu Baccha) மற்றும் ஆரா கிட் (Aura Kid) என அன்போடு அழைக்கின்றனர். கடந்த 9-ஆம் தேதி, ருத்ரான்ஷ் பெற்றோர் யவத்மாலில் உள்ள ஹோண்டா ஷோரூமுக்கு சென்று புதிதாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கியுள்ளனர்.

ஒரே இன்ஸ்டாகிராம் ரீல்.. ஓஹோ என மாறிய வாழ்க்கை..!! 2 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்..!!

குடும்பத்தினர் புதிய ஸ்கூட்டர் வாங்கிய மகிழ்ச்சியில் இருந்தபோது, ருத்ரான்ஷ் சன்கிளாஸ் அணிந்து, ஸ்கூட்டருக்கு முன்பாக நின்று ஸ்டைலாக போஸ் கொடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலானதி. ஒட்டு மொத்த குடும்பத்தில் சிறுவனின் செயல்பாடுகளே கவனம் ஈர்த்தன.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, நவம்பர் 19 நிலவரப்படி 13.8 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. மேலும், 1.15 கோடிக்கும் மேற்பட்ட லைக்குகளையும், 68,000-க்கும் அதிகமான கமெண்டுகளையும், 25 லட்சம் ஷேர்களையும் குவித்து மாபெரும் வரவேற்பை பெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்கள் இந்த சிறுவனின் பாவனைகளை கண்டு வியந்தனர். சாதாரண ஸ்கூட்டர் டெலிவரி தருணமாக தொடங்கியது, அவனை ஒரே இரவில் இன்ஸ்டாகிராம் ஸ்டாராக மாற்றியது. தற்போது இன்ஸ்டா பிரபலங்கள் இந்த சிறுவனை தேடி சென்று அவனுடன் ரீல்ஸ் எடுத்து பதிவிடுகின்றனர்.

Also Read

இந்த வீடியோவால் தங்களின் ஷோரூமுக்கும் புகழ் கிடைத்த நிலையில் , அந்த ஹோண்டா டீலர் திலீப் போபடே ருத்ரான்ஷை அழைத்து அவன் பட்டப்படிப்பு முடியும் வரை முழு கல்வி செலவுகளையும் தாமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். வீடியோ வைரலானதால் சிறுவனுக்கு கிடைத்த பரிசுகளை காட்டிலும், அவனது கல்விக்கு உறுதியளித்த ஷோரூம் உரிமையாளரின் இந்த முடிவை பலரும் பாராட்டியுள்ளனர்.

Recommended For You

தனது மகனின் வீடியோவுக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு குறித்து ருத்ரான்ஷின் தாய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முன்பு சமூக ஊடகங்களில் மற்ற குழந்தைகளின் வீடியோக்களை பார்த்து மகிழ்ந்ததாகவும், இப்போது பலரும் தங்கள் மகன் மீது அன்பை பொழிவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சாதாரணமாக தொடங்கிய ஒரு ஸ்கூட்டர் வாங்கும் பயணம், தங்கள் குடும்பத்திற்கு மறக்க முடியாத அனுபவமாகவும் சிறுவனின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையாகவும் மாறியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+