இந்தியாவில் பெருநகரங்களில் வாழ்க்கை செலவினங்கள் பல மடங்கு உயர்ந்த விட்டன. இது தொடர்பாக பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் குர்குவான் பகுதியில் வசிக்கக்கூடிய ஒரு நபர் இந்த நகரத்தில் வசிக்க மாதத்திற்கு 7.5 லட்சம் செலவு செய்ய வேண்டும் என வெளியிட்டு இருக்கும் பதிவு பலரது கவனத்தை பெற்றுள்ளது.
இந்திரஜித் என்பவர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், நான் குர்கான் பகுதியில் சொந்தமாக வீடு வைத்திருக்கிறேன், மூன்று கோடி ரூபாய் மதிப்பிற்கு நான் வீடு வாங்கி இருக்கிறேன், இந்த வீட்டிற்காக மாதம் 2 லட்சம் ரூபாய் ஈஎம் ஐ செலுத்துகிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார். அது தவிர மாதம்தோறும் அந்த வீட்டின் பராமரிப்பு செலவுக்காக 12 ஆயிரம் ரூபாயை செலுத்துகிறேன் என்னிடம் சொந்தமாக கார் இருக்கிறது, அந்த காருக்காக மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஈஎம்ஐ செலுத்துகிறேன் ,என்னுடைய பிள்ளைகளின் கல்வி செலவுக்காக மாதம் 65 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறேன் என கூறியுள்ளார்.

வீட்டு வேலை செய்பவர்களுக்கு மாத சம்பளமாக மாதம் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறேன் இது தவிர வாரத்திற்கு டின்னருக்காக வெளியே செல்வது என்பன உள்ளீட்ட செலவுகளுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார். தன்னுடைய சொந்த செலவினமாக மாதம் 12 ஆயிரம் ரூபாயும், இதர செலவினங்களாக மாதம் பத்தாயிரம் ரூபாயும் செலவு செய்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகிறது என குறிப்பிட்டிருக்கும் அவர் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்கிறேன் என்றால் நான் வருடத்திற்கு 90 லட்சம் சம்பாதிக்க வேண்டும் இதில் 30 சதவீதம் வருமானவரி வருமான வரி செலுத்த வேண்டும். இவ்வளவு சம்பாதித்தும் என்னிடம் சேமிப்பு இல்லை காப்பீடு இல்லை என கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. ஒரு பயனர் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நீங்கள் ஆண்டுக்கு 1.2 கோடி சம்பாதிக்க வேண்டும் அப்பொழுதுதான் வருமான வரி செலுத்திவிட்டு மீதமுள்ள பணத்தில் உங்கள் வாழ்க்கை வாழ முடியும் என கூறியிருக்கிறார்.
ஒரு பயனர் இந்தியாவில் ரியல் எஸ்டேட் மதிப்பு செயற்கையாக உயர்த்தப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பயனர் ஒரு பெரிய கேட்டட் கம்யூனிட்டியில் வசிக்கிறோம் மற்றவரிடம் நம் ஸ்டேட்டஸை காட்ட வேண்டும் என்பதற்காகவே பல்வேறு செலவுகளை நாம் செய்ய வேண்டி இருக்கிறது என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications