இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தின் தலையாய நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என்.சந்திரசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது இந்திய கார்ப்ரேட் துறைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் சந்திரசேகரன், தனது ராஜினாமாவை டாடா சன்ஸ் குழுமத்திற்கு அறிவிக்கும் கடிதத்தில் சில முக்கியமான விஷயத்தை தெரிவித்தது மட்டும் அல்லாமல், இந்த ராஜினாமா முடிவுக்கு யார் காரணம் என்பதையும் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை டாடா சன்ஸ் நிர்வாகத்திற்கு அளித்த கடிதத்தில், டாடா குழுமத்தின் எனது பணிக்காலம் 40 ஆண்டு காலம் நிறைவடைந்தது, என்னுடைய சேர்மன் பதவி பிப்ரவரி 20, 2027 உடன் முடிய உள்ளது. இந்த நிலையில் டாடா குழுமத்தில் பெரும் பங்குகளை வைத்திருக்கும் Sir Dorabji Tata Trust மற்றும் Sir Ratan Tata Trust ஆகியவை ஒருமனதாக என்னுடைய பதவிக்காலத்தை 2027ஆம் ஆண்டை தாண்டிய 5 வருடம் நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலை டாடா சன்ஸ் நிறுவனத்தின் பரிந்துரையாகவும், சம்பள கமிட்டியிடமும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பதவி நீட்டிப்பு குறித்து இறுதி ஒப்புதலுக்காக 2026 பிப்ரவரி 24 ஆம் தேதி டாடா சன்ஸ் நிர்வாக குழு கூட்டத்தில் இப்பரிந்துரையை சமர்ப்பிக்கும் போது, ஒரு நபர் மட்டும் என்னுடைய பதவி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், ஒருமனதாக ஒப்புதல் பெறாத காரணத்தால் இப்பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.
பிப்ரவரி கூட்டம் நடந்து 6 மாதம் முழுமையாக முடிந்த நிலையில், இதுவரையில் எவ்விதமான தீர்வும் எட்டப்படவில்லை. டாடா சன்ஸ் நிறுவனத்தில் தலைமைத்துவதில் தெளிவற்ற நிலை இருப்பது டாடா குழுமத்திற்கும், ஊழியர்களுக்கும் முதலீட்டாளர்கள், கூட்டணி நிறுவனங்களுக்கும், பங்குதார்களுக்கும் ஏற்புடையது இல்லை.
இதேவேளையில்ல டாடா குழுமத்தில் பல நிறுவனங்களில் பல முக்கிய திட்டங்கள் முக்கியமான கட்டத்தில் இருக்கும் காரணத்தால் இத்தகைய தெளிவற்ற தன்மை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்புடையது இல்லை என தனது கடித்ததில் தெரிவித்தார்.
இதன் மூலம் தனது ராஜினாமாவுக்கு யார் காரணம் என்பதையும், பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்வதற்கான விளக்கத்தையும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி கூட்டத்தில் சந்திரசேகரனின் பதவி காலம் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா தான். டாடா குழுமத்தில் பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில், இதற்கான திட்டம், தீர்வு காணப்படாமல் சந்திரசேகரனுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க முடியாது என தெரிவித்தார். இதன் பின்பு 6 மாதங்களாக பல கசப்பான விவாதங்களும், கருத்துக்களும் டாடா குழுமத்தின் உயர்மட்ட குழுவில் நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications

