இந்திய திரைத்துறையில் ஒவ்வொரு காலத்திலும் ஒரு பெரிய தயாரிப்பாளர் அனைத்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் வாய்ப்பை பெறும். அப்படி, தற்போது தென்னிந்தியாவில் பெரிய படம் என்றால் தயாரிப்பாளராகவோ அல்லது விநியோகஸ்தராகவோ ஒரு பெயர் கட்டாயம் இருக்கும், இந்த பெயர் தான் KVN புரொடக்ஷன்ஸ்.
இந்திய திரைத்துரையில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் வெங்கட் கே.நாராயணன், ரியல் எஸ்டேட் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு மாபெரும் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருந்து பல வெற்றிகளை கண்ட பின்பு, அப்பதவியை விடுத்து சினிமா துறையின் மீதான ஆர்வத்தின் காகனமாக திரைத்துறைக்கு வந்தவர்.

KVN productions தற்போது விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் ஜனநாயகன், அடுத்து மொத்த இந்தியாவை கலக்க வரும் கன்னட சூப்பர்ஸ்டாரான யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தின் யாஷ் கதாபாத்திரமான RAYA-வின் அறிமுக வீடியோ 24 மணிநேரத்தில் 200 மில்லியன் வியூவ்ஸ்-ஐ அள்ளியது, யூடியூப்-ல் இதுவரையில் 58 பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த 2 விஷயத்தால் தற்போது நாடு முழுவதும் KVN productions பெயர் பிரபலமாகியுள்ளது. இந்த மாபெரும் நிறுவனத்திற்கு பின் இருப்பவர் தான் வெங்கட்.
ரியல் எஸ்டேட் ஜாம்வான்
வெங்கட் கே. நாராயணன் பெங்களூரில் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரஸ்டீஜ் குரூப் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். இந்நிறுவனத்தில் 2003இல் சேர்ந்த அவர், 9 ஆண்டுகள் தலைமை நிதி அதிகாரியாகவும், 2017 ஆகஸ்ட் முதல் தலைமை செயல் அதிகாரியாகவும் (சிஇஓ) பணியாற்றினார்.
இவரது தலைமையில் பிரஸ்டீஜ் நிறுவனம் பெங்களூருவில் இருந்து மும்பை, டெல்லி-என்சிஆர் போன்ற பெரு நகரங்களுக்கு தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது. பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஒருங்கிணைந்த டவுன்ஷிப்கள் போன்ற பல பிரம்மாண்ட திட்டங்களை உருவாக்கி ரியல் எஸ்டேட் துறையில் தனி முத்திரையை இந்த நகரங்களில் பதித்துள்ளது.

வெங்கட் கே. நாராயணன் தலைமையில் பிரஸ்டீஜ் குரூப் இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் முன்னிலை பெற்றது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவது போன்ற முக்கிய முடிவுகளை அவர் எடுத்தார்.
வெங்கட் கே. நாராயணன்-ஐ வெறும் ரியல் எஸ்டேட் ஜாம்பவான் என்ற சிறிய கட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. சார்ட்டர்டு அக்கவுண்டண்ட், கம்பெனி செக்ரட்டரி, காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டண்ட், சட்டப் கல்லூரியிலும் பட்டம் பெற்றவர் என பல கல்வி தகுதிகளை கொண்டவர். 2024 மே மாதம் பிரஸ்டீஜ் குரூப்பில் இருந்து விலகி, சொந்தமாக துவங்கிய தொழில் முழு நேரமாக கவனம் செலுத்த முடிவு செய்தார்.
KVN புரொடக்ஷன்ஸ் துவக்கம்
வெங்கட் 2020இல் தொடங்கப்பட்ட KVN புரொடக்ஷன்ஸ், கர்நாடக திரைத்துறையில் இருந்து பான்-இந்திய அளவில் விரிவடைந்துள்ளது. ஆரம்பக்கட்டத்தில் கர்நாடக திரைத்துறையில் சிறிய டிஸ்ட்ரிபியூட்டராக துவங்கி தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
டிஸ்ட்ரிபியூஷன் பிஸ்னஸ்
KVN நிறுவனம் கர்நாடகாவில் ஆர்ஆர்ஆர், Sapta Saagaradaache Ello, அனிமல், கல்கி 2898 ஏடி, அஜித்-ன் Good Bad Ugly, சூர்யாவின் கங்குவா, விக்ரம்-ன் தங்கலான், துல்கர் சல்மானின் சீதா ராமம் போன்ற பல வெற்றி படங்களை கர்நாடாகாவில் விநியோகம் செய்து வரலாறு காணாத வசூலை காட்டியுள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து 2021 முதல் சிறு சிறு படங்களை தயாரித்து வந்த வெங்கட் 2025 முதல் பெரிய படங்களை தயாரித்து வருகிறார்.

அடுத்த முக்கிய பிராஜெக்ட்
விஜய்-யின் ஜனநாயகன், யாஷ்-ன் டாக்சிக் தாண்டி, ஹிந்தியில பிரியதர்ஷன் இயக்கத்தில் Haiwaan, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம்-ன் 2வது படமான பாலன் என்ற படத்தின் மூலம் ஹிந்தி மற்றும் மலையாள சினிமா துறையில் அடியெடுத்து வைக்கிறது KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.
இதை விட முக்கியமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கைதி 2 படத்தை பல மொழிகளில் ஓரே நேரத்தில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளார் KVN புரொடக்ஷன்ஸ்-ன் வெங்கட்.
ஜனநாயகன் படத்தின் சென்சார் சிக்கல்
தளபதி விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் போர்ட் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக அஜரான சீனியர் வழக்கறிஞர் பராசரன் இப்படத்திற்காக சுமார் 500 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

யாஷின் டாக்சிக்
Toxic: A Fairy Tale for Grown-Ups திரைப்படம் கன்னடம்-ஆங்கிலம் இருமொழி படமாக உருவாக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் ஆங்கில திரையுலகிலும் கேவிஎன் நிறுவனம் நுழைகிறது. டாக்சிக் படத்தில் யாஷ் ராயா கதாபாத்திரத்தில் நடிக்கிறார், கியாரா அட்வானி நாடியா, ஹுமா குரேஷி எலிசபெத், நயன்தாரா கங்கா, ருக்மிணி வசந்த் மெலிசா என்ற காதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த மாபெரும் திரைப்படத்தை பிரபல பெண் இயக்குனரான கீது மோகன்தாஸ் இயக்கிய இந்தப் படம் மார்ச் 19, 2026 அன்று கன்னடம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட இது போன்ற பெரிய படங்களை தயாரிப்பதால் KVN நிறுவனம் இந்தியா முழுக்க கவனிக்கப்படுகிறது.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியா சினிமா துறையில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ள ரன்வீர் சிங் நடித்து வெளியான துரந்தர் படத்தின் 2ஆம் பாகமும் மார்ச் 19 தேதி வெளியாகிறது.
வெங்கட் கே. நாராயணனின் நிதிதுறையின் அனுபவம், பெரிய ரியல் எஸ்டேட் திட்டங்களை கையாண்ட அனுபவம், ஆகியவை திரைத்துறையில் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிதி ஏற்பாடு செய்வதிலும், கையாளுவதிலும் உதவுகிறது. ரியல் எஸ்டேட் துறையின் வெற்றியை திரைத்துறையில் பயன்படுத்தி, பான்-இந்திய படங்களை உருவாக்கும் இவரது பயணம் பல புதிய தொழிலதிபர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications