2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலால் இந்தியா மட்டுமல்ல உலகமே அதிர்ச்சி அடைந்தது.
பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து இந்த தாக்குதலை நடத்தியது உறுதி செய்யப்பட்டது. ஒட்டு மொத்த நாடே கொதித்தெழுந்தது. இந்நிலையில் இந்திய ராணுவம் 2025ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி அதாவது இதே நாளில் தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இந்தியாவின் பஹல்காம் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளும் இணைந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் பதுங்கி இருந்த 9 பயங்கரவாத முகாம்களை அழித்தன.

இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் கூட எழுந்தது. 88 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷன் உலகின் பார்வையையே இந்தியா மீது திருப்பியது. பொதுமக்களுக்கு சேதம் ஏற்படாமல் மிக துல்லியமாக பயங்கரவாதிகளின் முகாம்களும் பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி ஓராண்டுக்கு முன்பு நமது ஆயுதப்படையினர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இணையற்ற தைரியத்தையும் துல்லியத்தையும் வெளிப்படுத்தினர் என பெருமிதம் தெரிவித்திருக்கிறார். நம் படைகளின் வீரத்தை ஒட்டுமொத்த தேசமும் வணங்குகிறது என கூறியிருந்தார்.

இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாக தன்னை எவ்வளவு மேம்படுத்தி இருக்கிறது என்பதை இந்த உலகிற்கே எடுத்துரைக்க கூடிய ஒரு ஆபரேஷன் ஆக அமைந்தது ஆபரேஷன் சிந்தூர். இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக இந்திய ராணுவம் பயன்படுத்தியது ரேடார் தொழில்நுட்பம், வான் பாதுகாப்பு அமைப்பு , கமெண்ட் சென்டர்கள் ஆகியவற்றை கடந்து டிரோன்களை சிறப்பாக பயன்படுத்தியது. அதாவது உளவு பார்க்கவும் துல்லிய தாக்குதல் ந்டத்தவும் டிரோன் தொழில்நுட்பங்கள் பெரும் உதவியாக அமைந்தன. டிரோன்களும் முக்கிய ஆயுதங்களாக மாறின.
எதிரிகளின் கண்ணில் படால் சிறப்பாக டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது இந்திய ராணுவம். அந்த வகையில் இந்த ஓராண்டு காலத்தில் இந்திய பாதுகாப்பு படை நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப சிறப்பாக தன்னை வடிவமைத்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு துறை தன்னிறைவு என்றால் ஆயுத தயாரிப்பு மட்டுமல்ல நவீன தொழில்நுட்ப திறன்களும் தான் என இந்தியா நிரூபணம் செய்துள்ளது.
இந்தியாவில் 38,575 டிரோன்கள் பாதுகாப்பு படையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கிட்டதட்ட 39,890 பேர் இந்த டிரோன்களை இயக்குவதற்கான சான்றிதழ்களை பெற்றிருக்கிறார்கள். சுமார் 244 பயிற்சி மையங்கள் உருவாகி இருக்கின்றன. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தான் இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான ஸ்டார்ட் அப்புகள் வேகம் எடுக்கத் தொடங்கின.
அர்மானி என்ற பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஷார்ட் கட் நிறுவனத்தின் நிறுவனர் அமர்திப் சிங் ஒரு காலத்தில் இந்தியா அனைத்து பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கும் வெளிநாடுகளை தான் சார்ந்து இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத்தில் நாம் தற்சார்பு அடைந்திருக்கிறோம் என கூறுகிறார். இந்தியாவில் டிரோன் மற்றும் பாதுகாப்பு துறை தொழில்நுட்பங்களுக்கு சிறந்த எதிர்காலம் ஏற்பட்டுள்ளது என்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் இந்தியா ராணுவ தாக்குதல் மட்டுமல்ல, துல்லியமான தாக்குதல்கள், தொழில்நுட்ப அடிப்படையிலான தாக்குதல்களிலும் சிறந்து விளங்குகிறது என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அதே வேளையில் உள்நாட்டிலேயே பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கும் வித்திட்டுள்ளது. ஆகாஷா ஏர் டிபன்ஸ், டாடாவின் டிஏஎஸ்எல் என பல நிறுவனங்கள் இதன் மூலம் வளர்ச்சி அடைந்துள்ளன.


Click it and Unblock the Notifications

