வெங்காயத்தின் விலை குறித்து அதிக இண்ட்ரோ எல்லாம் தேவை இல்லை. அந்த அளவுக்கு மக்கள் வெங்காய விலையினால் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க பரவலாக வெங்காயத்தின் விலை சுமாராக 120 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை ஆகி வருகின்றன. ஆனால் இந்த விலை ஏற்றத்துக்கு முன் ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது தெரியுமா..? இதோ பாஜக அரசே சொல்லி இருக்கிறதே பாருங்கள்.
இந்தியா முழுக்க சராசரியாக வெங்காயத்தின் விலை 440 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானே நேற்று டிசம்பர் 10, 2019 மக்களவையில் சொல்லி இருக்கிறார்.
441 சதவிகிதம்
கடந்த மார்ச் 2019-ல், இந்தியா முழுக்க சராசரியாக, ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்ததாம். ஆனால் டிசம்பர் 03, 2019 அன்று சராசரியாக இந்தியா முழுக்க சுமார் 81 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறதாம். ஆக 441 சதவிகிதம் வெங்காயத்தின் விலை அதிகரித்து இருக்கிறது.
நகரம் விலை
ஒரு கிலோ வெங்காயத்தின் விலை டெல்லியில் 96 ரூபாய், கொல்கத்தாவில் 140 ரூபாய், மும்பையில் 102 ரூபாய், சென்னையில் 100 ரூபாய், திருவனந்தபுரத்தில் 150 ரூபாய், திருப்பதியில் 150 ரூபாய்-க்கு விற்கப்பட்டு வருவதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் சொல்லி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் தென் இந்திய மாநிலங்களில்தான் வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
வரத்து குறைவு
அளவுக்கு அதிகமான பருவ மழை காரணமாக, சந்தைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து கணிசமாக குறைந்தது. இதனால் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாயைத் தொட்டு, மேலும் விண்ணைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறது. இதுவரை வெங்காயத்தின் விலை பரவலாக இறக்கம் கண்டதாகத் தெரியவில்லை.
இறக்குமதி
வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து இருக்கிறதாம். எனவே வெங்காய விலை விரைவில் இறக்கம் காணும் என்கிறார்கள் அரசு தரப்பினர்கள். மத்திய அரசின் கணிப்புப் படி வெங்காயத்தின் விலை குறைந்துவிட்டால் முதலில் சந்தோஷப்படுபவர்கள், மக்களாகத் தான் இருப்பார்கள். எத்தனை நாட்களுக்கு தான் வெங்காயம் இல்லாத அல்லது வெங்காயத்தை மிகக் குறைவாக பயன்படுத்தி சமைத்த உணவைச் சாப்பிடுவது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications