கடந்த இரண்டு வாரங்களில் வெங்காய விலை 30-50% வரை உயர்ந்துள்ளது. வெங்காயம் இந்திய உணவில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை உணவில் ஒரு அங்கமாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் சந்தையில் வரத்து குறைந்துள்ளதுடன், பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு விலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்திவிடும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் தங்களது கையிருப்பை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

நாசிக் லாசல்காவோ மண்டியில் திங்கட்கிழமை அன்று மொத்த விலை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.26 ஆக இருந்தது, இது மே 25ம் தேதி இருந்த ரூ.17 உடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய உயர்வாகும்.
மொத்த விலை விற்பனையில் சிறந்த தரம் வாய்ந்த வெங்காயத்தின் வர்த்தக அளவில் சிறிய பங்கு வகிக்கிறது என்றாலும், இதன் விலை கிலோவுக்கு ரூ.30 ஐ தாண்டி கூடுதல் அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும் இது அனைத்தும் மொத்த விலை விற்பனை விலை, ரீடைல் சந்தையில் வெங்காயம் விலை 50 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்படுகிறது.
வெங்காயத்தின் விலை உயர்வு அதை வாங்கும் மக்களுக்கு அதிகப்படியான அதிர்ச்சியைக் கொடுத்தாலும், இதை விளைவிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. பொதுவாகவே விவசாயிகளிடம் இருந்து வாங்கும் காய்கறிகள் பல கைகள் மாறி ரீடைல் சந்தைக்கு வரும்போது இதன் விலை கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிக விலைக்குத் தான் விற்கப்படுகிறது.
ஆனால் இதுபோன்று சந்தையில் சப்ளை - டிமாண்ட் பிரச்சனை வரும் போது ஏற்படும் விலை உயர்வு தான் விவசாயிகளை மகிழ்விக்கிறது. வெங்காய விலை உயர்வுக்கு முக்கிய காரணமும், தேவைக்கும் வரத்துக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு தான்.
ஜூன் மாதம் முதல் சந்தைகளுக்கு வரும் வெங்காயம், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வைத்திருக்கும் கையிருப்பில் இருந்து வருபவை. 2023-24 (ரபி) பருவ பயிரில் எதிர்பார்க்கப்படும் குறைவு காரணமாக விலை உயரும் என எதிர்பார்த்து, விவசாயிகள் தங்கள் கையிருப்பில் இருந்து மெதுவாகவே விற்பனை செய்கின்றனர்.
40% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி மந்தமாக இருந்தாலும், வரும் ஜூன் 17ம் தேதி பக்ரித் பண்டிகை முன்னிட்டு உள்நாட்டு தேவை வலுவாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
"மகாராஷ்டிராவின் வெங்காயத்திற்கு, குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து கடும் தேவை உள்ளது" என்று நாசிக், மகாராஷ்டிராவைச் சேர்ந்த வெங்காய வியாபாரி விக்ராஸ் சிங் கூறினார்.
விலை உயர்வு சாமானிய மக்களைப் பாதிக்கும் என்பதால், மத்திய அரசு விரைவில் தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நுகர்வோர் வலியுறுத்துகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications