மும்பை: ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும், அதுவும் மாடி வீடு முதல் குடிசை வீடு வரை அத்தியாவசிய பொருளாக இருக்கக் கூடிய வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே விண்ணைத் தொட்டு வருகிறது.
அதிலும் தமிழகத்தில் குறிப்பாக சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் 150 ரூபாயை தொட்டது.

இது ஒரு புறம் இருப்பினும், மறுபுறம் வெங்காயம் விலையை குறைக்க அரசு பல இறக்குமதி சலுகைகளையும் அளித்து வருகிறது. இருப்பினும் இன்று வரை வெங்காயம் விலை குறைந்தபாடாக இல்லை.
சமையலறையில் அனுதினமும் தேவைப்படும் வெங்காயத்திற்கு தேவை எப்போதும் குறையாது என்பது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் முகூர்த்த தினங்களும் அதிகம் இருப்பதால், வெங்காயத்திற்கான தேவை இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில் சின்ன வெங்காயம் 150 ரூபாய்க்கும், இதே பெரிய வெங்காயம் விலை 80 - 100 ரூபாய் வரை வர்த்தகமாகி வருகிறது. எனினும் வெங்காயத்தின் விலை என்ன தான் இறக்குமதியை அதிகரித்தாலும், பிப்ரவரி மாதம் வரையிலும் பெரியதாக குறைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
சில்லறை சந்தைகளில் தான் இந்த விலை எனில் மொத்த சந்தையிலும் கிலோ வெங்காயத்தின் விலை, 70 - 80 ரூபாய் வரை வர்த்தகமாகி வருகிறதாம். இது குறித்து குல்டெக்கி மொத்த சந்தையில் வணிகர் ஒருவர் இது குறித்து கூறுகையில், சாதாரணமாக சந்தைக்கு 70 - 80 லாரிகள் வெங்காயம் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து வரும். அதே போல் கர்நாடகவில் இருந்து சில லாரிகள் வரும். ஆனால் கடந்த 10 - 15 நாட்களாகவே வெறும் 20 லாரிகள் மட்டுமே வருகின்றன. இது இங்கு மட்டும் அல்ல நாடு முழுவதும் இதே நிலை தான். சராசரி காலத்தை விட வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இதற்கு முக்கிய காராணம் தீவிர மழையின் காரணமாக வெங்காயம் அதிகம் விளையும் மாவட்டங்களில் வெங்காயம் உற்பத்தி குறைவு, வெங்காயம் பயிர்கள் அழுகல், தாமதமான பயிர் இவற்றால் உற்பத்தி குறைந்துள்ளது. இதனாலேயே வெங்காய வரத்தும் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு சரியான மழையின்மை காரணமாக சந்தைகளுக்கு வரத்து குறைந்தது. இதனால் வெங்காயம் இருப்பும் குறைந்துள்ளது. இதனால் பழைய வெங்காயம் என்பது அவ்வளவாக இல்லை. இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனினும் இந்த அளவு வெங்காயம் விலையேற்றம் கண்டாலும், விவசாயிகளுக்கு அதன் முழு பலன் கிடைத்ததா என்றால் இல்லை. அதன் முழுபலனும் மற்றவர்களுக்கு தான் கிடைக்கிறது என்றும் ஒரு புறம் குற்றச் சாட்டு எழுகிறது.
இந்தியாவில் மாதம் 15 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் தேவைப்படுகிறதாம். அதுவும் தினசரி 50 ஆயிரம் மெட்ரிக் டன் தேவை இருக்கிறது. இந்த நிலையில் சந்தைக்கு வரத்தோ 10 -12 சதவிகிதம் தான் இருக்கிறது. இதனால் வெங்காயம் விலை இப்படி ஒரு தாறுமாறான ஏற்றத்தை கண்டுள்ளது. எப்படி எனினும் தற்போதைக்கு வெங்காயம் விலை குறைய போவதாக தெரியவில்லை.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications