விண்ணை முட்டும் விலைவாசி: தாறுமாறாக உயரும் வெங்காயம் விலை.. கிராமங்களில் தான் நிலைமை மோசம்..!!

இந்தியாவில் காய்கறி உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதனால் கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களின் மாதாந்திர பட்ஜெட் எகிறியுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட தரவுகளும் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

நம் நாட்டின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. அப்படி என்றால் பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன என அர்த்தம். இந்தியாவில் நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம், முந்தைய ஆகஸ்ட் மாதம் 4.83% ஆக இருந்து செப்டம்பர் மாதத்தில் 5.54% ஆக உயர்ந்துள்ளது. காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலையில் ஏற்பட்ட கடுமையான ஏற்றம் தான் ஒட்டுமொத்தமாக நாட்டின் சில்லறை பணவீக்கம் உயர காரணம்.

விண்ணை முட்டும் விலைவாசி: தாறுமாறாக உயரும் வெங்காயம் விலை.. கிராமங்களில் தான் நிலைமை மோசம்..!!

மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, உணவு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 5.97% ஆக இருந்து செப்டம்பரில் 7.74% ஆக உயர்வு கண்டுள்ளது. அதாவது நாம் உணவுக்காக செய்யும் செலவு ஆகஸ்டை விட செப்டம்பரில் 1.71% அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் வெங்காயத்தின் பணவீக்கம் 108.09% ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த மாதத்தில் நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சமடைந்துள்ளது. பல இடங்களில் 1 கிலோ வெங்காயமே 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதே இதற்கு சாட்சி. வெங்காயம் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் ஒரு பொருள் என்பதால் நேரடியாகவே இது நம் குடும்ப பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பூண்டு பணவீக்கம் ஆகஸ்டில் 43.60%-லிருந்து செப்டம்பரில் 54.62% ஆக அதிகரித்துள்ளது. அதே போல எலுமிச்சையின் பணவீக்கம் 15.15%-லிருந்து 36.41% ஆக உயர்ந்துள்ளது.அதாவது பூண்டி, எலுமிச்சை பழம் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. ஆனால் மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி விலைகள் சரிவை கண்டன என அரசின் தரவுகள் கூறுகின்றன.

Also Read

இந்த தரவுகளில் மற்றொரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது, வழக்கமாக நகரங்களில் விலைவாசி அதிகமாகவும் கிராமங்களில் குறைவாகவு தான் இருக்கும். ஆனால் செப்டம்பரில் கிராமப்புற சில்லறை பணவீக்கம் 6.08% ஆக இருந்ந்து, நகரங்களில் 4.88%ஆகவே பதிவாகியுள்ளது. குறிப்பாக உணவு பொருட்கள் விலை ஏற்றம் கிராமங்களில் அதிகமாகவும் நகரங்களில் குறைவாகவும் உள்ளது.

உணவு பொருட்களை தாண்டி, தனிப்பட்ட பராமரிப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் இதர பொருட்கள் , சேவைகளின் பணவீக்கம் 13.75% ஆக பதிவாகியுள்ளது. 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், தமிழ்நாடு அதிகபட்சமாக 6.81% பணவீக்கத்தை பதிவு செய்துள்ளது.

Recommended For You

ஒட்டுமொத்தமாக பார்த்தால் செப்டம்பரில் நம் வீட்டு செலவுகள் குறிப்பாக உணவுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே பல்வேறு நிதி சுமைகளில் இருக்கும் கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களுக்கு காய்கறிகளின் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை பணவீக்கம் அக்டோபரில் உயர்கிறது என்றால் இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் இதனால் நம் வீட்டு கடன், வாகன கடன் வட்டிகளும் உயரும். எனவே இனி வரும் மாதங்கள் சற்றே கடினமான காலமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் முடிந்தவரை சிக்கனமாக இருப்பது தான் நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+