பண்டிகை காலம் முடிந்ததிலிருந்து வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்தியாவின் முன்னணி சந்தைகளிலும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. நம் நாட்டில் சமைக்கப்படும் சைவ மற்றும் அசைவ உணவுகளில் முதன்மை பொருளாக இருப்பது வெங்காயம் தான். வெங்காயம் இல்லாத உணவு வகைகள் மிகவும் குறைவே. பெருவாரியாக வெங்காயம் கொள்முதல் செய்யப்படும் இடங்களில் மழையின் காரணமாக வரத்து குறைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் காரிஃப் பயிர் வரத்து தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக இனிவரும் நாட்களில் வெங்காய விலை குறையும் என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். தற்போது வெங்காயத்தின் அகில இந்திய சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு 54 ரூபாயாக உள்ளது. உயர் விலையில் விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தை டெல்லி மற்றும் பெரு நகரங்களிலும் ரூ.35 என்ற விலையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது அரசாங்கத்திடம் 4.5 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் 15 லட்சம் டன் இன்று வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வெங்காய தட்டுபாட்டைக் குறைக்க இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ரயில் மூலம் வெங்காயம் கொண்டு செல்லப்படுகிறது. வெங்காய விலை சீராகும் வரை ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி பிற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, சென்னை, குவாஹத்தி போன்ற பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களில் 4850 டன் வெங்காயம் ரயில்வே மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 3,170 டன் வெங்காயம் டெல்லி சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெங்காயம் 34 சதவீதம் அதிகம் பயிரிடப்பட்டாலும், மழையின் காரணமாக இந்த அதிகரிப்புக்கும் எந்த பலனும் இல்லாமல் போயுள்ளது. அதேபோல காய்கறிகளின் விலை தொடர்ந்து உணவுப் பொருள் பணவீக்கத்தை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் வெளியான கிரிசில் அறிக்கையிலும் வெஜ் மீல்ஸ்-இன் விலை செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாதம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் காய்கறிகள் மற்றும் பருப்பு விலை ஏற்றம்.
வெங்காய வலையின் இந்த அதிகரிப்பு இந்தியக் குடும்பங்கள் மட்டும் இன்றி உணவகங்களையும் பாதித்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications