இனி டெய்லி வெங்காய சட்னி தான்.. மானிய விலையில் வெங்காய விற்பனைக்கு நடவடிக்கை எடுத்த மத்திய அரசு!

மத்திய அரசின் மானிய விலையிலான வெங்காய விற்பனை முயற்சியால் முக்கிய நகரங்களில் வெங்காய விலை குறைந்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. இந்த முயற்சி செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. டெல்லியில் வெங்காய விலை கிலோவுக்கு ரூ. 60 ரூபாயில் இருந்து ரூ. 55 ஆகவும், மும்பையில் கிலோவுக்கு ரூ. 61 ரூபாயில் இருந்து ரூ. 56 ஆகவும் குறைந்துள்ளது. சென்னையில் கிலோவுக்கு ரூ. 65 ரூபாயில் இருந்து ரூ. 58 ஆக விலை குறைந்துள்ளது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NCCF மற்றும் NAFED அவுட்லெட் மற்றும் வேன்கள் மூலம் வெங்காயத்தை கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய் மானிய விலையில் விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி எடுத்தது. டெல்லி மற்றும் மும்பையில் தொடங்கிய இந்த திட்டம், பின்னர் சென்னை, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி, புவனேஸ்வர் மற்றும் கவுகாத்தி உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 இனி டெய்லி வெங்காய சட்னி தான்.. மானிய விலையில் வெங்காய விற்பனைக்கு நடவடிக்கை எடுத்த மத்திய அரசு!

அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, மானிய விலையில் வழங்கப்படும் வெங்காயத்தின் அளவை அதிகரிக்கவும், இ-காமர்ஸ் தளங்கள், கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் மதர் டெய்ரியின் SAFAL ஸ்டோர்களை விரிவுபடுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

முக்கிய நகரங்களில் வெங்காயத்தை மொத்தமாக விற்பனை செய்யும் பணியையும் அரசு தொடங்கியுள்ளது. இது ஏற்கனவே டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் தொடங்கப்பட்டு, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கொல்கத்தா மற்றும் இறுதியில் அனைத்து மாநில தலைநகரங்களுக்கும் நீடிக்கப்பட உள்ளது.

சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்தை இரண்டையும் உள்ளடக்கிய போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. ஏனெனில் அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்புகளை தடுக்கவும் இது போன்ற முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டை விட 4.7 லட்சம் டன் வெங்காயம் மற்றும் காரீஃப் பயிர்களின் பரப்பளவு அதிகரித்திருப்பதால், வரும் மாதங்களில் வெங்காய விலை கட்டுக்குள் இருக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்தியாவில் விலைவாசி உயர்வு குறைந்துள்ளது, ஆனால் இன்னும் கடக்க வேண்டிய தூரம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ஷக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை கூறினார். விலைவாசி உயர்வு 4% இருப்பதை உறுதி செய்யும்படி ரிசர்வ் வங்கிக்கு அரசு பணி ஒப்படைத்துள்ளது.

மானிய விலையில் வெங்காய விற்பனை வழங்கப்படுவதன் காரணமாக, பெரிய நகரங்களில் வெங்காய விலை குறைந்துள்ளது. அரசு, மானிய விலையிலான வெங்காயத்தை அதிகரித்து, விநியோக சேனல்களையும் விரிவுபடுத்தியுள்ளது. இதன் காரணமாக இனி வரும் காலங்களிலும் வெங்காயத்தின் விலை சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு இதுபோன்ற நல்ல திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் நலனடைய முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+