பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜனவரி 1 முதல் வெங்காயத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதன் எதிரொலியாக நாசிக் மொத்த விலை விற்பனை மண்டியில் ஒரு குவின்டால் வெங்காயம் விலை சுமார் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட்களாக இருக்கும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது, அதுவும் மத்திய அரசு ஏற்றுமதிக்கு ஒப்பதல் அளித்த பின்பு ஏற்பட்டு உள்ள விலை உயர்வு நாட்டு மக்களின் உணவுப் பொருட்கள் மீதான செலவுகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி
மத்திய வெளிநாட்டு வர்த்தகப் பொதுத்துறை (DGFT) இந்தியாவில் வெங்காய விலை குறைந்துள்ளதன் வாயிலாகத் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் இருந்து இனி அனைத்து வகையான வெங்காய வகைகளை எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஜனவரி 1ஆம் முதல் அனுமதி அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தது.
மொத்த விலை சந்தை
இதன் வாயலாக அடுத்த இரண்டு நாடுகள் நாசிக் லசால்கவுன் மொத்த விற்பனை சந்தையில் ஒரு குவின்டால் வெங்காயம் 1,951 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெறும் இரண்டு நாட்களில் இதன் விலை சுமார் 2,500 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
தடாலடி உயர்வு
செவ்வாய்க்கிழமை இதன் அளவு 2,400 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் படி கடந்த 2 நாட்களில் வெங்காயத்தின் விலை சுமார் 28 சதவீதம் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
ரீடைல் சந்தை விலை
மொத்த விலை சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு ரீடைல் சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை முதல் ஒரு கிலோ வெங்காயம் 35 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை 50 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதிக்குத் தடை
செப்டம்பர் மாதம் இந்திய ரீடைல் சந்தையில் வெங்காயத்தின் விலை 100 ரூபாயைக் கடந்த நிலையில் மத்திய அரசு விலையைக் கட்டுப்படுத்த ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. தற்போது விலை அதிகளவில் குறைந்ததைத் தொடர்ந்து தற்போது ஏற்றுமதிக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications