பட்ஜெட் 2023 இன் வெளியான அறிவிப்பின்படி ஆன்லைன் கேமிங் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு அதாவது வெற்றிப்பெற்ற பணத்திற்கு TDS பிடித்தம் ஜூலை 1,2023 க்கு பதிலாக ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மார்ச் 24 ஆம் தேதியன்று ஆன்லைன் கேம் வெற்றிகளின் முலம் பெறப்படும் தொகைக்கு 30% டிடிஎஸ் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு ஓரளவுவிற்கு நிம்மதி அளிப்பதாக தி டயலாக் நிறுவனத்தின் தலைமைப் பணியாளர் கிருத்தி சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த வரி விதிப்பானது வரவேற்கத்தகது எனவும், இதன் மூலம் சிறிய தொகையை முதலீடு செய்து பணத்தை இழக்கும் நபர்களின் எண்ணிக்கையை இது குறைக்கும் எனவும் கிருத்தி சிங் கூறியுள்ளார்.
ரூ.10,000 மேல் இருந்தால் டிடிஎஸ் விதிக்கப்படும்!
ஒரு நிதியாண்டில் ஆனலைன் கேமிங் மூலம் ரூ.10,000 மேல் வருமானம் ஈட்டினால் 30% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
உதரணமாக தனிநபர் ஒருவர் ரூ.1,000 இலவசமாக செலுத்தி ரூ.35,500 வென்றுள்ளார் என்று வைத்துக்கொள்வோம். பின்னர், ஆன்லைன் கேமிங் நிறுவனம் 35,500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயை அதிலிருந்து கழிக்கும். அதன்பின் இருக்கும் ரூ.34,500 க்கு 30% (ரூ.34,500-30%) டிடிஎஸ் வரி கணக்கிடப்படும். அதில் ரூ.10,350 டிடிஎஸ் தொகை அரசாங்கத்திற்கு டெபாசிட் செய்யப்படும் மற்றும் மீதமுள்ள ரூ.24,150 தனிநபர் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆன்லைன் கேமிங் வளர்ச்சி!
உண்மையான பணத்தை வழங்கும் ஆன்லைன் ரம்மி, போக்கர் மற்றும் பிற ஆன்லைன் கேம்கள் சமீபத்திய காலங்களில் அதிவேக வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆன்லைன் கேமிங் துறையில் மக்கள் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களைப் மூலம் ஆன்லைன் கேமிங்களை விளையாடு பணம் சம்பாத்தித்து வருகின்றனர்.
ஆன்லைன் கேமிங் வருமான வரி!
தற்போதைய வருமான வரிச் சட்டங்களின்படி, வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது, 'பிற ஆதாரங்களில் இருந்து வருமானம்' என்ற தலைப்பின் கீழ் இதற்கு வரி விதிக்கப்படுகிறது.
சாமானியர்கள் பாதிப்பு குறையும்!
ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. இதில் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள இளைஞர்கள் எப்படியாவது பணம் சம்பாதித்திட வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் குறைந்த பணத்தை முதலீடு செய்து விளையாடுகின்றனர்.
எளிதானது இல்லை
ஆனால் ஆன்லைன் கேமிங் மூலம் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை. ஒரு சிலரே குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தை பெறுகின்றனர். அதை நம்பி பலரும் அதில் பணம் கட்டி விளையாடி தோற்றுப் போகின்றனர்.
அதனால பலர் மன உளைச்சலுக்கும் ஆளாகி தற்கொலை செய்து கொண்ட செய்திகளும் உண்டு. இந்த 30% வரி விதிப்பு மூலம் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications