இந்தியாவில் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பலரும் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் வரை செல்கின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டு மசோதாவை கொண்டுவர இருக்கிறது.
ஆன்லைன் விளையாட்டு மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் பணத்தை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைனில் விளையாடப்படும் அனைத்து வகையான விளையாட்டுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். தற்போது இருக்கக்கூடிய விளையாட்டுகள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்படும். ஆனால் இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால் 2 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக அனைத்து இந்திய விளையாட்டு சங்கம், ஆன்லைன் விளையாட்டு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் கூட்டாக மத்திய உள்துறை அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கின்றன. அந்த கடிதத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் 2 லட்சம் வேலை இழப்பு ஏற்படும் என்றும் 400 நிறுவனங்கள் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பு தரக்கூடியதாக ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன என்றும் அரசின் இந்த நடவடிக்கை இந்த துறைக்கு சாவு மணி அடிக்கும் என்றும் அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சன்ரைஸ் செக்டாராக ஆன்லைன் கேமிங் துறை இருக்கிறது என்றும் இவற்றின் மொத்த மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் இந்த இந்த துறை 31,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது என்றும் வரியாக மட்டும் 20,000 கோடி ரூபாயை செலுத்துகிறது என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டி இருக்கின்றனர்.

ஆண்டு தோறும் 20% என்ற விகிதத்தில் ஆன்லைன் கேமிங் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது , மேலும் ஆன்லைன் விளையாட்டு துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மதிப்பு 25,000 கோடி ரூபாயை கடந்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். அரசு ஒட்டுமொத்தமாக பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிப்பதற்கு பதிலாக, அதனை ஒழுங்குமுறைப்படுத்தலாம் என கூறியுள்ளனர்.
நியாயமான முறையில் இயங்கும் தளங்களை அரசு முடக்கினால், இந்தியாவில் முறைகேடான பல்வேறு ஆன்லைன் தளங்கள் கால் பதிக்க வழிவகை செய்யும் என அதில் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். இளம் தொழில் முனைவோர் மற்றும் டெவலப்பர்கள் மற்றும் டிஜிட்டல் கேமிங் துறையில் பணியாற்றி வரும் லட்சக்கணக்கானவர்களின் சார்பாக நாங்கள் கேட்டுக் கொள்வது பணத்தை அடிப்படையாக கொண்டு விளையாடப்படும் அனைத்து விளையாட்டுகளுக்கும் தடை விதிக்காமல் அதனை மேற்கொண்டு வளர்ச்சி அடைய செய்யும் வகையில் ஒழுங்கு முறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் இவற்றை கொண்டு பல லட்சம் மோசடிகளும் நிகழ்கின்றன. பணத்தை இழந்துவிட்டு ஏராளமானவர்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டம் அமலில் இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications