டெல்லி: ஆன்லைன் சில்லறை வர்த்தகம் என்றாலே இன்று நமக்கெல்லாம் ஞாபகத்திற்கு வருவது அமேசான், அடுத்தது பிளிப்கார்ட் தான். அந்தளவுக்கு நம் ரத்ததில் ஊறிப்போன பெயர்.
ஏற்கனவே இந்த ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவங்களால் பெருத்த அடி வாங்கியுள்ள, இந்திய சில்லறை வணிகர்கள், இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற பயத்தில் உள்ளனர்.
ஒரு புறம் இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை வர்த்தகமே ஆட்டம் கண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.
முக்கிய புள்ளிகளை சந்திக்கும் ஜெஃப்
இப்படி ஒரு நிலையில் அடுத்த வாரம் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் இந்தியா வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தியா வருவபவர் சும்மா வரவில்லையாம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளாராம். அவரை மட்டும் அல்ல முக்கிய தொழில்துறையினரையும் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், அரசு மூத்த அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விழாவில் பங்கேற்கலாம்
மேலும் தலை நகரில் நடைபெற உள்ள, இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களைக் மையமாகக் கொண்ட SMBhav நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனவரி 15 - 16 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல உயர் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக இதில் அமேசான் நிறுவனரும் கலந்து கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வலுக்கும் எதிர்ப்பு
அமேசான் மற்றும் வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனங்கள் மிக அதிகமான தள்ளுபடியையும், சலுகைகளையும் அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய சில்லறை வியாபரிகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் வலுவான எதிர்ப்புகள் உள்ள நிலையில் ஜெஃப் பேசோஸ் பிரதமரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
கடுமையான விதிமுறைகள்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் வர்த்தகர்களின் எதிர்ப்பால் மத்திய அரசு, கடந்த ஆண்டு இந்த நிறுவனங்களுக்கான விதிமுறைகளை மிகக் கடுமையாக்கியது. இந்த கடுமையான விதிமுறைகள் அந்த நிறுவனங்களின் விற்பனையாளர்களின் தயாரிப்புகளை வழங்குவதையும் தடை செய்யும் விதத்தில் அமைந்தன. இதனால் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் சற்று பின்னடைவை கண்டன.
எதை பற்றி பேச போகிறார்?
ஆக கடுமையான விதிமுறைகளுக்கு மத்திய இந்த விதிமுறைகளை தளர்த்த கோரிக்கை வைக்கப்படலாம். மேலும் இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக அரசு போதுமான சலுகைகளை வழங்கினால் மீண்டும் அமேசான் விஸ்வரூபம் எடுக்கலாம் என்ற நிலையில், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்னதான் நடக்கிறது என்று.
வர்த்தகர்களையும் சந்திக்கலாம்
SMBhav விழாவில் கலந்து கொள்ளும் ஜெஃப், அங்கு கலந்து கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுடன் எப்படி புது தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது என்பது பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படி எனினும் இது முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவே பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் போட்டி
முன்னதாக அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மட்டுமே போட்டி வந்துள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டு தீபாவாளிக்குள் தனது ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தை ஆரம்பிக்க உள்ளதாக கூறியிருந்தார். ஆக இது அமேசானுக்கு மிக பின்னடைவாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், அதை பற்றிய பேச்சு வார்த்தைகளும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு
ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வரும் ரிலையன்ஸ், ஆன்லைன் வியாபாரத்திலும் கொடிகட்டி பறக்க வாய்ப்புள்ளது. தான் எந்தவொரு தொழிலை தொடங்கினாலும் அதில் சலுகை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் ரிலையன்ஸ் ஜியோ வருக்கைக்கு பின்னர் எத்தனை நிறுவனங்கள் காணமல் போயின என்று நமக்கே தெரியும். ஆக அமேசானுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகவே இருக்க போகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications