ஆன்லைன் மோசடியில் அதிக பணத்தை இழந்த வாடிக்கையாளர் பட்டியியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதன் படி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின் படி, கடந்த 2016 - 2017ம் ஆண்டு முதல் 2018 - 2019ம் ஆண்டு வரை அதிகபட்சமாக தமிழகத்தில் 56 கோடி ரூபாய் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டதாகவும் , இதே காலத்தில் மஹாராஷ்டிராவில் 46 கோடி ரூபாய் இழப்புடன் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக கூறப்பட்டது.
இதே 31 கோடி ரூபாயை பறிகொடுத்து ஹரியானா மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டது.
அதிகரித்து வரும் மோசடி
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், ஒரு புறம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் வாதி ஒருவர் ஆன்லைன் வலைதளத்தில் ஒரு ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கல் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆறு மடங்காக அதிகரித்துள்ள மோசடி
இதுபோன்ற பல மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற பல ஆயிரம் வழக்குகள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் மார்ச் 2017 முதல் இந்த மோசடிகள் ஆறு மடங்காக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த நிலையில் 12 ஆகஸ்ட் 2016 முதல் மார்ச் 2017 வரை 977 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வளவு வழக்குகள்?
கடந்த ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான காலத்தில் 2,441 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரையிலான காலத்தில் 4,955 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2019 வரையிலான காலத்தில் மட்டும் 5,620 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் ஆகஸ்ட் 2016ல் இருந்து இதுவரை மொத்தம் 13,993 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆன்லைன் வர்த்தக வளர்ச்சி அதிகரிக்கலாம்
இன்றைய இளைய தலைமுறையினர் ஆன்லைன் ஷாப்பிங்க்கு அடிமையாகி வரும் நிலையில், இந்த மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டெலாய்ட் இந்தியா மற்றும் சில்லறை விற்பனை சங்கத்தின் பிப்ரவரி அறிக்கையின் படி, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் சந்தை. 2021ம் ஆண்டில் அதன் வளர்ச்சியை 84 பில்லியன் டாலர்களை பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆப்லைன் சில்லறை வர்த்தகம்
இது கடந்த 2017ல் வெறும் 24 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது. இது சில்லறை வர்த்தகத்தில் 2017ல் 795 பில்லியன் டாலர்களாக இருக்கும் நிலையில், 1.2 டிரில்லியன் டாலராக வளர்ச்சி இருக்கும் என்றும் கருதப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய லட்சக்கணக்கான மக்கள் தொகை கொண்ட நாடு, நுகர்வோர் சந்தைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சி திறனை வழங்குகிறது. இதனால் வளர்ச்சியும் நாளுக்கு நாள் கூடி வருகிறது.
இணைய பயன்பாடு அதிகரிக்கும்
முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவில் நாளுக்கு நாள் இணைய பயன்பாடும் அதிகரித்து வருகிறது. கடந்த 2016ல் 432 மில்லியன் பயனர்கள் இருந்த நிலையில், 2021ம் ஆண்டு 647 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இணைய ஊடுருவலும் 2016ல் 30 சதவிகிதத்திலிருந்து, 2021ம் ஆண்டில் 59 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆன்லைன் நிறுவனங்கள் அதிகரிக்கலாம்
தற்போது 15ல் இருக்கும் ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதே போல ஸ்மார்ட்போன் உபயோகமும் அதிகரித்து வரும் நிலையில், 2016ம் ஆண்டில் 260 மில்லியனில் பயனர்களில் இருந்து, 2021ம் ஆண்டு 450 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் 2019ம் நிலவரப்படி மொத்த இணைய சந்தாதாரகளின் எண்ணிக்கை 636.73 மில்லியனாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications