ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில் வெறும் 1-2 சதவீதம் பேர் மட்டுமே உண்மையில் வருமான வரி செலுத்துகிறார்கள், மேலும் இவர்கள் மட்டுமே நாட்டின் மொத்த வரி வசூலில் சுமார் 27 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் கூறுகிறது.
2023-24 ஆம் கணக்கீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்குகளை (ITRs) ஜூலை 31 காலக்கெடுவிற்கு முன்னதாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது. வழக்கம் போல் கடைசி நேரத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த முறை கால நீட்டிப்பு செய்ய எவ்விதமான அறிவிப்பும் இதுவரையில் அறிவிக்கவில்லை.

ஐடிஆர் இ-ஃபைலிங் போர்ட்டலில் ஏற்கனவே 5 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் தங்களுடைய ஐடிஆர் அறிக்கையை தாக்கல் செய்து, 4.46 கோடி பேர் ஈவெரிபிகேஷன்-ம் செய்து முடித்துள்ளனர். ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாவிடில் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31 வரையில் தாமத கட்டணத்துடன் வரி அறிக்கையை தாக்கல் செய்யலாம்.
5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு 5000 ரூபாய் தாமத கட்டணம், 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் கொண்டவர்களுக்கு 1000 ரூபாய் தாமத கட்டணம் விதிக்கப்படும். மத்திய வருமான வரித்துறை இதுவரையிலே ITR தாக்கல் செய்ய கால நீட்டிப்பு அறிவிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு எழுத்து பூர்வமாக பதில் அளிக்கும் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமாக தரவுகளை முன்வைத்தார். 2019-20 முதல் 2022-23 வரையிலான காலக்கட்டத்தில் வருமான வரி இணக்கம் அதிகரித்து என்றும், இதை வருமான வரிக் கணக்கு அறிக்கையை தாக்கல் செய்யும் நபர்களின் எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஜீரோ வரி உள்ளவர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2019-20 மற்றும் 2022-23 க்கு இடையில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 3.4 சதவீதம் என்ற சராசரி வளர்ச்சியை எட்டியுள்ளது, இதேவேளையில் ஜீரோ வரி உள்ளவர்களின் வருமான வரி தாக்கல் எண்ணிக்கை 15.5 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் 7.4 கோடி பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அதில் 5.16 கோடி பேர் அல்லது 70 சதவீதம் பேர் பூஜ்ஜிய வரி அளவை கொண்டுள்ளனர். அப்படியானால் 2022-23 ஆம் நிதியாண்டில் வெறும் 2.24 கோடி பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர் இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1.6 சதவிகிதம் மட்டுமே.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications