பொதுவாக இந்தியாவில் முக்கிய பொறுப்புகளில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக குறைவு என்றே கூறலாம். குறிப்பாக நிதித் துறையில் மிக குறைவாகும். இதற்கு சிறந்த உதாரணமே இந்த பதிவு எனலாம். 12 பொதுத்துறை வங்கிகளில் மொத்த இயக்குனர்களில் வெறும் 10.66% மட்டுமே பெண்கள் என ஒரு ஆய்வறிக்கையானது தெரிவித்துள்ளது.
இன்னும் தெளிவாக கூற வேண்டுமெனில் 122 இயக்குனர்களில், வெறும் 13 பெண்கள் மட்டுமே உள்ளனர்.
பல பணியிடங்கள் காலியாக இருந்தாலும் முக்கிய முடிவெடுக்கும் அதிகார வரம்புகளில், பெண்களின் பங்களிப்பு என்பது மிக மிக குறைவாக உள்ளதையே இந்த தரவானது சுட்டிக் காட்டுகின்றது.
பெண் இயக்குனர்கள்
பேங்க் ஆப் மகாராஷ்டிரா. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி ஆகியவற்றின் வங்கி குழுவில் பெண் இயக்குனர்கள் யாரும் இல்லை. இதே கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் இரண்டு பெண் இயக்குனர்கள் உள்ளனர்.
மொத்த நிலவரம் என்ன?
பேங்க் ஆப் பரோடா, எஸ்பிஐ, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கிகளில் ஒரே ஒரு பெண் இயக்குனர் மட்டுமே உள்ளார்.
மொத்தமாக மேற்கண்ட வங்கிகளில் 186 இயக்குனர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் 122 மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதனால் 64 இடங்கள் அல்லது 34.41% காலியிடம் உள்ளது. இந்த 122 இயக்குனர்களில் 109 பேர் ஆண்கள் ஆவர். வெறும் 13 பேர் மட்டுமே பெண்கள் ஆகும். இந்த தரவானது FSIB தளத்தின் தரவின் அடிப்படையில் எழுதப்பட்டது.
காலியிட பட்டியல்
செப்டம்பர் 2021ல் 91 இயக்குனர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன. இது கிட்டத்தட்ட 50% ஆகும். இந்த விகிதமானது பிறகு 34% ஆக குறைந்துள்ளது தான் ஆறுதல் தரக்கூடிய விஷயம்.
பஞ்சாப் சிந்து வங்கியில் கடந்த செப்டம்பர் 2009 முதல் காலியிடம் உள்ளது. இதே கனரா வங்கியில் ஜனவரி 1, 2023 முதல் காலியிடம் உள்ளது. இதே மற்ற காலியிடங்களில் 2014ல் 7 காலியிடங்களும், 2015ல் 5 காலியிடங்களும், 2016ல் 13 இடங்களும், 2017ல் 5 இடங்களும், 2018ல் 3 காலியிடங்களும், 2019ல் 8ம் 2020ல் 12 காலியிடங்களும், 2021ல் 4 காலியிடங்களும், 2022ல் 2 காலியிடங்களும் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.
எந்தெந்த வங்கிகளில் என்ன?
பேங்க் ஆப் இந்தியா மற்றும் யூகோ வங்கிகளில் முறையே 6 காலியிடங்கள் உள்ளன. மீதமுள்ள வங்கிகளின் இயக்குனர்கள் பட்டியலில் 4 - 5 காலியிடங்கள் உள்ளன. பொதுத்துறை வங்கிகளின் இயக்குனர் குழுக்களில் சட்டப்படி தேவைப்படும் முழுமையான எண்ணிக்கையில் இயக்குனர்கள் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம்.
முக்கிய பொறுப்பு
எஸ்பிஐ தவிர, 11 பொதுத்துறை வங்கிகளின் இயக்குனர்கள் குழுவில் Chartered Accountancy specialisation நிபுணத்துவம் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற இயக்குனர்கள் இல்லை. இந்த இயக்குனர் வங்கியின் தணிக்கை குழுவின் தலைவராக இருப்பர். இந்த தலைவர் அந்த வங்கிகளின் முக்கிய முடிவுகள், குறிப்பாக கடன் வழங்கும் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்கின்றவர் ஆவார். ஆனால் அந்த இடமே காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications