மும்பை: பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தாலும், நிதித்துறையை பொறுத்த வரையில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக குறைவாகவே உள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச மகளிர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினத்தில் பெண்கள் நிதி ரீதியான முதலீடு குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
நிதி ரீதியான முக்கிய முடிவு
இன்றைய காலகட்டத்திலும் பெண்கள் நிதி ரீதியான முக்கியமான முடிவினை தனித்து எடுக்கிறீர்களா? என்று உங்களிடம் கேட்டால் உங்களின் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்பது தான் உண்மையே.
இது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 77% பெண்கள் தங்களது நிதியியல் கணக்கினை கையாண்டாலும், வெறும் 27% பெண்கள் மட்டுமே சொந்தமாக, அவர்களது நிதி ரீதியிலான முடிவுகளை எடுக்கிறார்களாம்.
எத்தனை பேரிடம் ஆய்வு?
இது குறித்தான ஆய்வினை MYRE கேப்பிட்டல் அமைப்பு நடத்தியது. இது குறித்து அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 நகரங்களில் 5200 பெண்களிடம் நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் முதலீட்டு நடத்தை மற்றும் நிதி குறித்தான முடிவினை எடுத்துள்ளது.
முக்கிய முதலீடுகள்
நாடு முழுவதும் உள்ள பெண்கள் பிக்சட் டெபாசிட் மற்றும் தொடர் வைப்பு நிதி மட்டும் அல்ல, பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்ட சில முக்கிய திட்டங்களில் தான் முதலீடு செய்கிறார்களாம்.
பங்கேற்ற பெண்களில் சுமார் 42% (2185) 25 - 35 வயதுகுட்பட்டவர்கள் மற்றும் 33% பெண்கள் (1724) 35 - 50 வயதுகுட்பட்டவர்கள் ஆவர்.
ரியல் எஸ்டேட் & கார்ப்பரேட் பத்திரம்
இந்த ஆய்வில் வெளியான சுவாரஸ்யமான விஷயங்களில், முதலீட்டினை பெருக்கும் நோக்கத்தில் முதலீடு செய்யும் பெண்கள், 79% மற்றும் 63% பெண்கள் ரியல் எஸ்டேட் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்கள் போன்ற அதிக லாபம் தரக்கூடிய திட்டங்கள் பற்றி தங்கள் ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளனராம்.
ஆய்வின் நோக்கம்
இந்த ஆய்வு குறித்து MYRE கேப்பிட்டல் அமைப்பு தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆர்யமன் விர், பெண்கள் எப்படி நிதி முடிவினை எடுக்கிறார்கள். அவர்களின் முதலீட்டு முறையை பற்றிய அடிப்படை யதார்த்தைப் புரிந்து கொள்வதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகவும் உள்ளது.
பெண்களின் ஆர்வம்
அனைத்து வகையான முதலீட்டு திட்ட வகைகளிலும் முதலீடு செய்ய பெண் முதலீட்டாளர்களின் பங்கேற்பு அதிகரிப்பதை காண்கிறோம். எனினும் பெரும்பான்மையானவர்கள் நிதி முடிவுகளை எடுக்க நண்பர்கள், வாழ்க்கை துணையை நம்பியிருக்கிறார்கள்.
இப்படியும் இருக்கிறார்கள்
எனினும் இன்னும் இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவும் ஒரு முடிவு உள்ளது. இது 31% பெண்கள் தங்கள் வீடுகளில் நிதி முடிவுகளில் ஈடுபடவே இல்லை என தெரிய வந்துள்ளது.
எப்படியிருப்பினும் 12 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உள்ள பெண்களில் 88% பேர் தங்களது நிதி முதலீட்டினை தீர்மானிக்கிறார்களாம். இது பெண்களின் நம்பிக்கை அதிகரிப்பதையே சுட்டிக் காட்டுகின்றது.


Click it and Unblock the Notifications