இந்தியாவில் பெரும் பணக்காரர் என்ற உடன் நம் நினைவுக்கு முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கௌதம் அதானி, ஷிவ் நாடார், லட்சுமி மிட்டல் இன்னும் சிலரின் பெயர் நினைவுக்கு வரும், ஆனால் யாரிடமும் இல்லாத பல காஸ்ட்லியான விஷயங்கள் இந்த பணக்காரரிடம் உள்ளது. இவர் மும்பையிலோ, டெல்லியிலோ அல்லது வெளிநாட்டிலோ இல்லை, சென்னையில் இருந்து ஒரு 630 கிலோமீட்டர் தொலைவில் ஹைதராபாத்தில் தான் வாழ்ந்துள்ளார்.
1886 ஆம் ஆண்டு ஹைதராபாத்-ல் பிறந்த மீர் ஓஸ்மான் அலி கான் தான் சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனர் ஆவார். ஹைதராபாத் மாகாணத்தின் கடைசி நிஜாம் மீர் ஓஸ்மான் அலி கான், பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான பகுதியாக விளங்கியது இந்த மாகாணம். 1911 முதல் 1948 வரையில் மீர் ஓஸ்மான் அலி கான் தான் ஹைதராபாத் மாகாணத்தை ஆண்டார்.

சுதந்திரத்திற்குப் பின்பு ஹைதராபாத் மாகாணம் பாகிஸ்தான் உடன் சேர்வதா அல்லது தனி நாடாக இந்தியாவுக்கு மத்தியில் இருப்பதா என் நிலை வரும் போதும், 1948ல் இந்தியாவுடன் இணைய முடிவு செய்தார் மீர் ஓஸ்மான் அலி கான். சுதந்திர இந்தியாவில் தனித்தனி மாகாணங்களாக இருந்த பல பகுதிகள் யாருடன் சேருவது என்பதில் பெரும் குழப்பத்தைச் சந்தித்தது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு 1940ல் மீர் ஓஸ்மான் அலி கான் அவர்களின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர், இன்றைய ரூபாய் மதிப்பில் 35.8 பில்லியன் டாலராகும். இது மட்டும் அல்லாமல் 22 பிப்ரவரி மாதம் 1937ல் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் மீர் ஓஸ்மான் அலி கான் இடம்பெற்றார்.
மீர் ஓஸ்மான் அலி கானின் செல்வத்தை ஒரு வரியில் விளக்க வேண்டுமெனில் இவர் 185 காரட் கொண்ட ஜேக்கப் வைரத்தை paperweight ஆக பயன்படுத்தினாராம். மீர் ஓஸ்மான் அலி கான் தனது ஆட்சி காலத்தில் ஹைதராபாத் மாகாணத்தில் பெரிய அளவில் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றார்.
இவருடைய ஆட்சி காலத்தில் தான் முறையான சாலை, ரயில்வே, மின்சாரம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. இது மட்டும் அல்லாமல் இந்தியாவின் முதல் ஏர்போர்ட் 1930ல் Begumpet Airport உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முதல் விமான நிறுவனமான Deccan Airways-ஐ 1937ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கினார் மீர் ஓஸ்மான் அலி கான்.

இது மட்டும் அல்லாமல் மீர் ஓஸ்மான் அலி கான் மார்டன் ஹைதராபாத்-ன் வடிவமைப்பாளர் என அழைக்கப்படுவார், இவருடைய ஆட்சி காலத்தில் தான் உஸ்மானியா பல்கலைக்கழகம், ஹைதராபாத் உயர்நீதிமன்றம், ஜூபிலி ஹால், நிஜாமியா கண்காணிப்பகம், மொஸாம் ஜாஹி மார்க்கெட், காச்சிகுடா ரயில் நிலையம், அசாஃபியா நூலகம், டவுன் ஹால், ஹைதராபாத் அருங்காட்சியகம், உஸ்மானியா பொது மருத்துவமனை, நிஜாமியா மருத்துவமனை ஆகியவை கட்டப்பட்டது.
1947 ஆம் ஆண்டில், நிஜாம் தனது திருமணத்தின் போது வருங்கால ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு ஒரு தலைப்பாகை மற்றும் நெக்லஸ் உள்ளிட்ட வைர நகைகளை பரிசாக வழங்கினார். ப்ரோச்ஸ் மற்றும் நெக்லஸ் ராணி இறக்கும் வரை அணிந்திருந்தார், மேலும் இந்த நெக்லஸ் ஹைதராபாத் நிஜாம் நெக்லஸ் என்று அழைக்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications