இன்றைக்கு பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். விவசாயத்தில் இருந்து விண்வெளி வரை அவர்களது சாதனைப் பயணம் தொடர்கிறது. 1951 ஆம் ஆண்டில் கர்நாடகத்தின் மங்களூரை சேர்ந்த ஜனார்தனன் ராவ் ஊட்டிக்கு குடிபெயர்ந்தார்.
அங்கு அவரது உறவினர் ஒருவர் மாடர்ன் லாட்ஜ் என்ற தங்கும் விடுதியை நடத்தி வந்தார். அங்கு வந்து ஜனார்த்தனன் ராவும் தங்கிக் கொண்டார். சுதந்திரம் வாங்கி 4 வருடகாலமே ஆகிய நிலையில் ஊட்டியில் ஏராளமான சமையல் கலைஞர்கள் வேலையில்லாமல் இருந்ததை ராவ் பார்த்தார்.

அவர்கள் சாக்லெட், ஃபட்ஜஸ் இன்னும் ஏராளமான பேக்கரி ஐட்டங்களை செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதை ராவுக்குள் மறைந்திருந்த தொழில்முனையும் புத்தி கண்டுபிடித்துவிட்டது.
அவர்களை சிலரை வேலைக்கு வைத்துக் கொண்டு எட்டினஸ் சாலையில் 250 சதுர அடி பரப்பில் ஒரு சிறிய பேக்கரி மற்றும் சாக்லேட் கடையைத் திறந்தார்.
ஊட்டியில் பிரிட்டிஷாரின் கலாசாரம் நிறைந்திருந்ததால் பிரட் மற்றும் சாக்லெட்களுக்கு நல்ல மார்க்கெட் இருந்தது.
இந்தநிலையில் 1951 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதியன்று மாடர்ன் ஸ்டோர் என்ற அந்தக் கடையை ராவ் திறந்தார். இப்போது அதற்கு மாடீஸ் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மாடர்ன் ஸ்டோர்ஸில் ஜாம், சாக்லெட், உயர் ரக மிட்டாய்கள், எக்லேர்ஸ், ஜாப்பனீஸ் கேக்குகள் போன்றவை விற்கப்படுகின்றன.
ஜனார்தனன் ராவின் மகன் முரளிதர் ராவ் இப்போது கடையை நடத்தி வருகிறார்.
ஊட்டியில் நிறைய ஹாஸ்டல் வசதியுடனான கான்வென்ட் பள்ளிகள் இருக்கின்றன. அதன்மூலம் ஹாஸ்டல் மாணவர்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்தக் கடையின் கஸ்டமர்களாக இருக்கின்றனர். இந்தக் கடை தொடங்கப்பட்டு 72 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இங்கு 600 விதமான உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
சாக்லெட்கள் மட்டும் 200 ரகங்கள், பிரட்டில் 50 வகைகள், டெசர்ட்களில் 80-90 வகையானவை மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான ஐட்டங்கள் கிடைக்கின்றன. இந்த கடையைப் பற்றிச் சொல்லக்கூடிய சிறப்பம்சம் என்னவென்றால் இதில் வேலைபார்க்கும் 70 பேரும் பெண்கள். மாதத்துக்கு 5000 கிலோ சாக்லெட்களை அவர்கள் தயாரிக்கின்றனர்.
எட்டினஸ் சாலையில் 20 ஆண்டுகள் இயங்கிய மாடர்ன்ஸ் ஸ்டோர் ஊட்டியின் கமர்ஷியல் தெருவுக்கு இடம் பெயர்ந்தது. 300 சதுர அடிக்கு கடையும் 200 சதுர அடியில் பேக்கரியும் செயல்படுகிறது.
படிக்கும் காலத்தில் இருந்தே முரளிதர் தனது தந்தைக்கு கடையில் உதவியாக இருந்துள்ளார்.
1992-93 வாக்கில் ஜனார்தனன் ராவிடம் வேலைபார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டனர் எஞ்சிய வெகு சிலரே இந்த சாக்லெட் தொழில்நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள்.
1995 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஊட்டியில் சுற்றுலா மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது. இதனால் மாடர்ன் ஸ்டோருக்கும் அதிக வாடிக்கையாளர்கள் வந்தனர். அப்போது அந்தக் கடையில் 18 வகையான சாக்லெட்களும் சில வகையான ஃபட்ஜ்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.
கல்லூரி படிப்பு முடித்தவுடன் முரளிதர் ராவ் கடையில் முழு கவனத்தைச் செலுத்தினார். சாக்லெட் தயாரிப்பில் ஜோரான கலைஞர்களை வேலைக்கு சேர்த்து விதவிதமான சாக்லெட்களை உருவாக்கத் தொடங்கினார்.
2000 ஆம் ஆண்டில் தமது கடையின் பெயரை காலத்துக்கு ஏற்றபடி மாடர்னாக மாற்ற விரும்பினார் முரளிதர். மாடர்ன் ஸ்டோர் பழைய பஞ்சாங்கமாக அவருக்கு தோன்றி விட்டது.
ஊட்டி ஹாஸ்டல் மாணவர்கள் இந்தக் கடையை சுருக்கமாக மாடீஸ் என்று அழைத்தனர். இதனால் அந்தப் பெயரையே கடைக்கு வைக்கக்கூடாது என்று யோசித்த முரளிதர் அப்படியே பெயரை மாற்றிவிட்டார். மாடீஸுக்கு ஊட்டியில் மூன்று கடைகளும், குன்னூர், கோத்தகிரியில் கிளைகளும் உள்ளன. பெரும்பாலான விற்பனை ஊட்டியில்தான் நடைபெற்றது.
ஊட்டியில் சுற்றுலா தொடர்பான பல வேலைவாய்ப்புகள் இருந்ததால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை இருந்தது. இதையடுத்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பாடுபடும் பெண்களுக்கு மட்டுமே வேலை தருவது என்று முரளிதர் முடிவு செய்தார்.
இல்லத்தரசிகளை வேலைக்கு சேர்த்து அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போது முரளிதர் ராவின் மனைவி ஸ்வாதி ராவ் மேற்பார்வையில் சாக்லெட் ஃபாக்டரி செயல்படுகிறது.
வேலை செய்யும் பெண்களில் பலர் விதவைகள், விவாகரத்து ஆனவர்கள் அல்லது கணவரால் கைவிடப்பட்டவர்கள் அல்லது வயதான கணவர்களைக் கொண்டவர்கள் என்று சமூகத்தில் அழுத்தப்பட்டவர்கள் ஆவர்.
பாரத் ஜோதோ யாத்திரையின்போது ஊட்டிக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் மாடீஸ் நிறுவனத்துக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு இந்த பெண்கள் சாக்லெட் செய்முறையை கற்றுத் தந்தனர்.
63 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத அசுந்தா மாடீஸில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். தனது வாழ்வாதாரத்துக்கு இந்த வேலைதான் உதவியாக இருக்கிறது என்கிறார்.
2008 ஆம் ஆண்டில் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். எனது தாயாரும் இங்குதான் வேலை பார்த்தார். எனது தங்கைக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் இங்கு வேலை பார்க்கிறார் என்று அசந்தா கூறுகிறார். மாதம் ரூ.20,000 சம்பளம் வாங்கும் தனக்கு பிஎப் போன்ற சலுகைகள் கிடைப்பதாகவும் கூறினார்.
இங்கு வேலை பார்க்கும் எல்லாருக்குமே 8 மணிநேர டூட்டிதான். மாதத்துக்கு நான்கு நாட்கள் விடுமுறை. வீட்டிலிருந்து வேலைக்கு வந்து போக இலவச வாகன வசதியும் தரப்படுகிறது.
இதில் வேலை பார்க்கும் 50 வயதான ராணி என்பவர் கூறுகையில் தனது நான்கு குழந்தைகளை படித்து ஆளாக்கியதற்குக் காரணம் இந்த வேலைதான் என்றார். அவருடைய குழந்தைகளுடன் ராணியையும் அவரது கணவர் கைவிட்டுவிட்டு சென்றுவிட்டும் சொந்தக்காலில் வாழ்கிறார்.
பரத நாட்டியக் கலைஞரான ஸ்வாதி 14 ஆண்டுகளாக மாடீஸை நிர்வகித்து வருகிறார். இங்கு வேலைபார்க்கும் பெண்கள் மிகவும் கடினமாகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் வேலை செய்வதாக ஸ்வாதி கூறுகிறார்.
மாடீஸில் இரண்டு வகையான சாக்லெட்கள் விற்கப்படுகின்றன. ஒன்று வெஜிடேரியன் மற்றொன்று கூவெர்சர் சாக்லெட். கூவெர்சர் சாக்லெட்டில் வெஜிடபிள் கொழுப்புக்குப் பதிலாக கோகோ பட்டர் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பட்டர் பயன்படுத்துவதால் சாக்லெட்டை சாப்பிடும்போது வாயின் அன்னத்தில் ஒட்டாது. கரைந்து வயிற்றுக்குள் செல்லும். இதுபோன்ற சாக்லெட் ஐரோப்பாவில்தான் செய்யப்படுகின்றன.
மாடீஸில் நட்டி கிளஸ்டர்ஸ், டிரஃபிள்ஸ், ப்ராலைன்ஸ், போர்பான்ஸ், ஃபட்ஜ், வெரைட்டியான ஹாட் சாக்லெட், விதவிதமான சாக்லெட் பார்கள், ஷுகர் ஃப்ரீ சாக்லெட், ஒயிட் சாக்லெட், ஃப்ரூட் சாக்லெட் போன்றவை விற்கப்படுகின்றன.
இது தவிர விதவிதமான டெஸர்ட்கள், பிரவுனிகள், பேஸ்ட்ரீஸ், கேக்குகள், மௌசஸ், கஸ்டர்டுகள் மற்றும் பீட்சா, பிரட், காபியும் கிடைக்கிறது.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ஹாட் சாக்லெட் திருவிழாவை நடத்துவதாக முரளிதர் கூறுகிறார். அவர்களது தயாரிப்புகள் அனைத்தும் முட்டை சேர்க்கப்படாதவை என்றும் வீகான், குளூட்டன் ஃப்ரீ ஆப்ஷன்களும் இருப்பதாகக் கூறினார். 10 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை மாடீஸில் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன.
கடந்த 70 ஆண்டுகளாக மங்களூரை சேர்ந்த கோகோ சிறு வியாபாரிகள் மற்றும் கோஆப்பரேடிவ் சங்கங்களிடமிருந்துதான் கோகோ பீன்ஸ்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
கோகோ பீன்ஸ்களை வாங்கி வறுத்து அரைத்து மாதத்துக்கு 5 டன் சாக்லெட்களை தயாரிக்கின்றனர். அரிய வகை பழங்கள், மங்களூர் முந்திரி, தமிழகத்தில் இருந்து வெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
அடுத்த பத்தாண்டுகளுக்குள் மாடீஸ் தயாரிப்புகளை அகில இந்திய அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே முரளிதர் ராவின் கனவாகவும் எதிர்காலத் திட்டமாகவும் உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications