நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நாளை நனவாகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஏப்ரல் 6 ஆம் தேதி ஊட்டியில் கட்டப்பட்டு உள்ள அதிநவீன பன்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்கிறார்.
இந்த மருத்துவமனையின் திறப்பு அப்பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நீலகிரி மக்கள் உயர் சிகிச்சைக்காகக் கோவை அல்லது மைசூர் போன்ற தொலைதூர நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருந்த நிலை மாறி, இனி ஊட்டியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளைப் பெற முடியும்.

இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி 40 ஏக்கர் பரப்பளவில், 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிலேயே இதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடக்க உள்ளது. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் கடந்த ஆட்சியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
நீலகிரியில் இந்து நகர் என்னும் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் 21 துறைகள் உள்ளன. இந்த மருத்துவமனை அப்பகுதி மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மருத்துவக் கல்லூரியில் பழங்குடியின மக்களுக்காக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு திறக்கப்படுகிறது. இந்த வார்டில், பழங்குடியின ஆண்களுக்கு 10 படுக்கைகளும், பெண்களுக்கு 10 படுக்கைகளும், பிரசவத்திற்குப் பிந்தைய சிகிச்சைக்கு 10 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது பழங்குடியின மக்களுக்காக பிரத்யேகமாக திறக்கப்படும் முதல் மருத்துவமனை வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டும் அல்லாமல் இந்த மருத்துவமனையில் நீலகிரியில் இருக்கும் பல்வேறு பழங்குடியின மக்களுக்கான சிறப்பு மருத்துவ கவுன்சிலிங் சேவையும் அவர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்பட உள்ளது. இந்த புதிய மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், அடிப்படை மருத்துவ சேவைகள் அனைத்தும் கிடைக்கும்.
இந்த மருத்துவமனையின் திறப்பு, நீலகிரி மாவட்டத்தின் மருத்துவத் துறையில் ஒரு மைல்கல்லாக அமையும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற இது வழிவகுக்கும். மேலும், மருத்துவக் கல்லூரி மூலம் இப்பகுதிக்கு திறமையான மருத்துவர்கள் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும். இதனால், நீலகிரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications