உலகில் பல நாடுகள் இறக்குமதி கச்சா எண்ணெய்-ஐ மட்டுமே நம்பியிருக்கும் வேளையில், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உருவாக்கியுள்ளது.
சவுதி அரேபியா தலைமையிலான OPEC அமைப்பு நாடுகள் ஒன்றாக இணைந்து தனது வருமானத்தை உயர்த்திக்கொள்ளவும், சப்ளை டிமாண்ட் அளவீட்டை சரி செய்யவும் ஒரு நாளுக்கு 11.6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதத்தில் இருந்து குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி 48 மணிநேரத்திற்குள் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஒரு பேரலுக்கு சுமார் 8 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் உலகின் பல நாடுகள் கச்சா எண்ணெய்-க்காக புதிய சப்ளையர்-ஐ தேட துவங்கியுள்ளது.
சவுதி அரேபியா
சவுதி அரேபியா தலைமையிலான OPEC அமைப்பு நாடுகள் உற்பத்தியை குறைக்கும் பட்சத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகளவிலான கச்சா எண்ணெய் தேவை இருக்கும் நிலையில் புதிய சப்ளையர்களை தேடும் பணிகள் பல நாடுகளில் இன்று முதலே அதிகரித்துள்ளது.
ரஷ்யா
இந்தியாவுக்கு ரஷ்யா-வின் சப்ளை உறுதுணையாக இருக்கும் வேளையில், தற்காலிகமாக இந்தியாவுக்கு எவ்விதமான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இருக்காது. ஆனால் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும், இது நேரடியாக நாட்டின் பொருளாதாரம், விலைவாசி ஆகியவற்றை பாதிக்கும்.
சீனா
இந்த நிலையில் சீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரபு நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணெய் அளவு குறையும் என்பதால் இன்று காலை முதல் லத்தின் அமெரிக்கா, அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
சவுதி அரேபியா, ஈராக்
சவுதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகள் தனது பெரும் பகுதி கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஆசிய நாடுகளான சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியா மட்டும் ஒரு நாளுக்கு 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளது.
பெட்ரோசீனா
சீன அரசுக்குச் சொந்தமான PetroChina Co. ஏற்கனவே கனடா, கொலம்பியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்களை வாங்கி வருகிறது. குவாங்டாங்கில் அமைந்திருக்கும் புதிய மெகா சுத்திகரிப்பு ஆலைக்கு மாதம் குறைந்தது 8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்குகிறது.
மாற்றம்
இதில் சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக OPEC அமைப்பில் இல்லாத நாடுகளிடம் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இது பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் விலை உயர்வையும் அடுத்த நாட்களில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications