வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் செலவினங்களின் அதிகரிப்பு ஆகியவற்றால், மக்கள் தங்கள் எதிர்காலத்திற்காக சிறிய தொகையாவது சேமிப்பதற்காக சேமிப்புக் கணக்கைத் திறக்கின்றனர். நாட்டில் ஏராளமான வங்கிகள் நல்ல வட்டி விகிதங்கள் மற்றும் சேமிப்புக் கணக்கிற்கான பல சலுகைகளை வழங்கினாலும், கிராமங்கள் அல்லது சிறிய நகரங்களில் உள்ள மக்களுக்கு வங்கிகள் உடனடியாகக் கிடைப்பதில்லை. இதனால் பலரும் நாடுவது போஸ்ட் ஆபீஸ்களைத்தான். இந்தப் பதிவில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கைத் திறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு என்றால் என்ன?: இந்திய தபால் நிலையங்கள் முழுவதும் வழங்கப்படும் ஒரு டெபாசிட் திட்டமே தபால் நிலைய சேமிப்பு கணக்கு. கணக்கு இருப்புத் தொகைக்கு நிலையான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. தங்கள் நிதி சொத்துகளை தபால் நிலையத்தில் நம்பி ஒப்படைக்கும் தனிநபர் முதலீட்டாளர்களுக்கு இது பயனுள்ள திட்டமாகும். குறிப்பாக, கிராமப்புற இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தபால் நிலைய சேமிப்பு கணக்கு திறப்பதற்கான தகுதி: ஒரு நபர் குறைந்தபட்சம் 18 வயதுடையவராக இருக்க வேண்டும். மைனராக இருந்தால், அவர்கள் குறைந்தது 10 வயதை பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 2 அல்லது 3 பேர் கூட்டு அஞ்சலக சேமிப்புக் கணக்கையும் தொடங்கலாம்.
தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம்: தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு தற்போது 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வட்டி கணக்கிடப்படுகிறது. வருமான வரி விதிகளின்படி, ஒரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.10,000க்கும் குறைவாக வருமானம் ஈட்டினால் வரி செலுத்த வேண்டியதில்லை.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கை எப்படி திறப்பது?:
ஸ்டெப் 1: உங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் செல்லவும் அல்லது விண்ணப்பப் படிவத்தை இந்திய அஞ்சல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கவும்.
ஸ்டெப் 2: தேவையான விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும்.
ஸ்டெப் 3: தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு, பான் கார்டு, 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவைத் தேவைப்படலாம்.
மேற்கூறிய ஆவணங்களைச் சமர்ப்பித்தவுடன், ஒருவர் தங்கள் தபால் நிலைய சேமிப்புக் கணக்கை எளிதாகத் திறக்கலாம்.


Click it and Unblock the Notifications