OpenAI - Ambani: உலகம் முழுவதும் ஏஐ குறித்து அதிகம் விவாதிக்கும் வேளையில், இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து உலகம் போற்றும் அளவுக்கு இன்னும் முழுமையான LLM உருவாக்க முடியாத நிலையில், உலகளவில் சிறந்து விளங்கும் ஓப்பன்ஏஐ தளத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு அம்பானிக்கு கிடைத்துள்ளது.
சாட்ஜிபிடி உருவாக்கிய ஓப்பன்ஏஐ தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக சுமார் 40 பில்லியன் டாலர் தொகையை திரட்டல் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் கூட ஐபோன் டிசைன் செய்த ஜானி ஐவ் நிறுவனத்தை ஓப்பன்ஏஐ கைப்பற்றியதை தொடர்ந்து விரைவில் இந்நிறுவனம் மக்கள் பயன்படுத்தும் ஒரு கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய முக்கியமான சூழ்நிலையில் தான் ஓப்பன்ஏஐ 40 பில்லியன் டாலர் தொகையை திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்த பணத்திற்காக சவுதி அரேபியாவின் PIF, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் MGX உள்ளிட்ட முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஓப்பன்ஏஐ.
சாப்ட்பேங்க் - OpenAI தலைமையில் உருவாக்கப்பட்டும் ஸ்டார்கேட் திட்டத்திற்கும், தனது தொழில்நுட்பம் மற்றும் வன்பொருள் கட்டமைப்பை மேம்படுத்துவற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த முதலீட்டு சுற்றில் முகேஷ் அம்பானி மற்றும் இதர வளைகுடா நாட்டு முதலீட்டாளர்கள் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த 40 பில்லியன் டாலர் முதலீட்டை தொடர்ந்து 2027-இல் கூடுதலாக 17 பில்லியன் டாலர் தொகையை திரட்டவும் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், ஓப்பன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மன் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சரை சந்தித்து, இந்தியாவில் மலிவு விலை ஏஐ எகோசிஸ்டம் உருவாக்கும் திட்டம் குறித்து விவாதித்தார். இந்த சந்திப்பு, இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஓப்பன்ஏஐ-யின் ஆர்வத்தை முதல் முறையாக வெளிப்படுத்தப்பட்டது.
இந்திய பயணம் முடித்ததும் சாம் ஆல்ட்மன், அபுதாபியைச் சேர்ந்த எம்ஜிஎக்ஸ் முதலீட்டு குழுவுடன் நிதி திரட்டல் குறித்து ஆலோசனை செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இருந்து வழிநடத்தி வந்த நிலையில், இந்நிறுவனம் லாப நோக்கமற்ற நிறுவனம் என்ற மாடலில் இருந்து லாபம் பார்க்கும் நிறுவனமாக மாற வேண்டும் என்ற திட்டத்தில் எலான் மஸ்க் உடன்பெறாத காரணதால் இந்நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறினார்.
இதன் பின்பு பல பிரச்சனைகளுக்கு ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் பெரும் தொகையை முதலீடு செய்து நிர்வாகத்தையும், நிறுவனத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்தது.


Click it and Unblock the Notifications