சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சாட் ஜிபிடி ஆகும்.
ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்த சாட் ஜிபிடி தான் சர்வதேச அளவில் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், எளிமையாக அதனை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அண்மையில் ஓபன் ஏஐ நிறுவனம் மிகப்பெரிய அளவிலான நிதி திரட்டலில் ஈடுபட்டது. அப்போது ஜப்பானை சேர்ந்த சாஃப்ட் பேங்க் குழுமம் ஓபன் ஏஐ நிறுவனத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்வதற்கு முன் வந்துள்ளது.
கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர்களை சாஃப்ட் பேங்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மஷா யோஷி சன் முதலீடு செய்ய முன் வந்திருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் வசம் இருக்கும் பங்குகளை சாஃப்ட் பேங்க் தலைமை செயல் அதிகாரி மஷா யோஷி சன்னிடம் விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளது. ஊழியர்கள் 1.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ் சாஃப்ட் பேங்க் தலைமை செயல் அதிகாரிக்கு விற்பனை செய்யலாம் என ஓபன் எஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக ஓபன் ஏஐ நிறுவன ஊழியர்களுக்கு டிசம்பர் 24ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிதி திரட்டலில் பங்கேற்க அவர்கள் விரும்பினால் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்து தங்கள் வசம் இருக்கும் ஓபன் ஏஐ நிறுவன பங்குகளை விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த சாஃப்ட்பேங்க் நிறுவனத்தை பொருத்தவரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய தயாராக இருக்கிறது.
தற்போது ஓபன் ஏஐ நிறுவன பங்குகளை வாங்க முன் வந்திருப்பது மட்டும் இல்லாமல் சிப் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கிராப்கோர் நிறுவனத்தையும் வாங்குவதற்கு முன் வந்துள்ளது. சர்வதேச அளவில் ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்த சாட் ஜிபிடி பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
இதற்கு போட்டியாக கூகுள் கொண்டு வந்த ஜெமினி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் கூட மக்களிடம் இந்த அளவு சென்று சேரவில்லை. சாட் ஜிபிடி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை ஒவ்வொரு வாரமும் 250 மில்லியன் பயனாளர்கள் இதனை ஆக்டிவாக பயன்படுத்துகிறார்கள்.


Click it and Unblock the Notifications