ஐடி ஊழியர்களே உஷார்.. தேடிப்பிடித்து விண்ட்சர்ஃப் நிறுவனத்தை வாங்கிய OpenAI.. இனி ஆட்டம் வேற ரகம்..!

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவை மக்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. போட்டோ எடிட்டிங், இணைய தேடலில் துவங்கி, கம்பியூட்டர் ப்ரோகிராமிங், மருத்துவ சேவை, ஆராய்ச்சி வரையில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இத்துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, விண்ட்சர்ஃப் என்ற ஏஐ- அசிஸ்ட் கம்பியூட்டர் கோடிங் தளத்தை பெரும் தொகைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி இத்துறையில் இருப்போரை குதுக்கலப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோடிங் சேவையில் மாஸ் காட்டி வரும் OpenAI தற்போது வாங்கியுள்ள புதிய டூல் மூலம் தனது ஏஐ ஏஜென்ட் செயல்பாட்டையும், செயல்திறனையும் பெரிய அளவில் மேம்படுத்த உள்ளதாக தெரிகிறது.

ஐடி ஊழியர்களே உஷார்.. தேடிப்பிடித்து விண்ட்சர்ஃப் நிறுவனத்தை வாங்கிய OpenAI.. இனி ஆட்டம் வேற ரகம்..!

Windsurf தெரியுமா உங்களுக்கு..?: விண்ட்சர்ஃப் (Windsurf) தளத்தை பலரும் கேள்விபட்டு இருந்தாலும் இந்நிறுவனத்தின் முந்தைய பெயரான கோடியம் (Codeium) அதிகம் பிரபலம். இந்த சேவை தளத்தை சுமார் 3 பில்லியன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பின் படி 25,000 கோடி ரூபாய் மதிப்பில் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஓபன்ஏஐ நிறுவனத்தின் மிகப்பெரிய நிறுவன கையகப்படுத்தல் ஆகும்.

இந்த ஒப்பந்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவடையவில்லை என்றாலும், இத்தகவலை ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இரு நிறுவனங்களுக்கு மத்தியில் வாய் வழியில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபன்ஏஐ மற்றும் விண்ட்சர்ஃப் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் கவனம்: சாட்ஜிபிடி (ChatGPT) உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏஐ-அடிப்படையிலான சாப்ட்வேர் டெவலப்மென்ட் துறையில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி உள்ளது. விண்ட்சர்ஃப், Natural Language Prompting அடிப்படையில் கோடிங் எழுதும் திறன் கொண்ட ஏஐ கருவியாகும். இது, சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கும், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், ப்ரீலான்சர்களுக்கு கோடிங் பணிகளை எளிதாக்கி, உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும்.

விண்ட்சர்ஃப் மதிப்பு: விண்ட்சர்ஃப்-ன் தாய் நிறுவனம் Exafunction Inc. கடந்த ஆண்டு முதலீட்டு சுற்றில் 1.25 பில்லியன் மதிப்பீட்டைப் பெற்றது. சமீபத்தில், Kleiner Perkins மற்றும் General Catalyst உள்ளிட்ட முதலீட்டாளர்களுடன் 3 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் மீண்டும் நிதி திரட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்கிடையில் ஒப்பன் ஏஐ மொத்தமாக கைப்பற்ற 3 பில்லியன் டாலர் ஆஃபரை முன் வைத்துள்ளது.

ஏகப்பட்ட போட்டி: உலகளவில் ஏஐ மூலம் கோடிங் செய்வதற்கான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. ஓபன்ஏஐ-யின் போட்டியாளரான ஆன்த்ரோபிக், மைக்ரோசாஃப்ட்-சொந்தமான கிட்ஹப் (GitHub) ஆகியவை ஏற்கனவே கோடிங் சேவையில் ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்து வரும் வேளையில் ஓபன்ஏஐ விண்ட்சர்ஃப் மூலம் ஒரு படிக்கு மேலே சென்றுள்ளது.

புதிய டிரெண்ட்: மேலும், ஆனிஸ்பியர் (Anysphere) என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம், கர்சர் (Cursor) என்ற ஏஐ கோடிங் கருவியை அறிமுகப்படுத்தி, முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்தகைய போட்டி மிகுந்த சூழலில், விண்ட்சர்ஃப்-ஐ வாங்கியது, ஓபன்ஏஐ-யை ஏஐ கோடிங் துறையில் ஒரு படிக்கு மேலே கொண்டு சென்றுள்ளது.

ஓபன்ஏஐ மதிப்பு: ஓபன்ஏஐ நிறுவனத்தின் சமீபத்தில் முதலீட்டு சுற்றில் 40 பில்லியன் டாலர் தொகையை திரட்டும் போது இந்நிறுவனம் சுமார் 300 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது.

ஏஐ தொழில்நுட்பம் தான் எதிர்காலம்: உலகளவில் தினமும் ஒரு ஏஐ சேவை தளம் உருவாக்கப்படும் அளவுக்கு டெக் துறையில் பிரபலமாகிவிட்டது. இதனால் எந்த பணிக்கு எந்த தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை கண்டிறிய ஒரு ஏஐ yellow pages தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு துறையிலும் ஆட்டோமேஷன் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக ஒவ்வொரு நிறுவனம் தனது வர்த்தகத்தில் எப்படி ஏஐ புகுத்தி கூடுதல் வருமானம், கூடுதல் வாடிக்கையாளர்கள், கூடுதல் வர்ததகத்தை பெற வேண்டும் என்பதை தினசரி அடிப்படையில் ஆலோசனை செய்து வருகிறது. இதேவேளையில் ஒவ்வொரு ஸ்டார்ட்அப் சிஇஓ-வும் சாட்ஜிபிடி-யை தினசரி பயன்படுத்துவதை ஒரு வழக்கமாக மாற்றியுள்ளனர்.

ஏஐ தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை எளிதாக்கும் இதேவேளையில், பலதரப்பட்ட வேலைகளை மாயமாக்க செய்கிறது என்பது மற்றொரு பெரும் கவலையாக உள்ளது. ஆனால் ஆட்டோமேஷன் பிரிவில் தினமும் பலதரப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதும் உண்மை. இதனால் நீங்க எந்த துறையில் பணியாற்றினால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த கற்றிக்கொள்வது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+