நவீன காலத்திற்கு ஏற்ப, புதிய புதிய தொழில்நுட்ப சாதனங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் ஒரு சில அதிநவீன சாதனங்கள் மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு சில நிமிடங்களில் செய்து முடிக்கிறது. எனவே தான் சிறந்த தொழில்நுட்ப கொண்ட சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி மனிதர்களால் செய்யக்கூடியவை என்று கூறப்பட்ட வேலைகளை தற்போது செயற்கை நுண்ணறிவு கருவியான சாட்ஜிபிடி (ChatGPT) செய்கிறது. இந்த சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவன சி.இ.ஓ. தான், சாம் ஆல்ட்மேன்.
இவர், தனது நெருங்கிய நண்பரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த, மென்பொருள் பொறியாளர் ஆலிவர் முல்ஹெரினை (38 வயது) கடந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஹவாயில் இந்த திருமண விழா மிகவும் எளிமையான முறையில் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகின. இந்தநிலையில், 39 வயதான இவருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை வரவேற்கும் வகையில் "welcome to the world, little guy!" என்று குழந்தை, கை விரலை பிடித்தப்படி இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தனது குழந்தை முன்கூட்டியே பிறந்ததால், மருத்துவமனையில் சிறிது காலம் NICU (Neonatal Intensive Care Unit) சிகிச்சையில் இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், அவன் நலமுடன் இருக்கின்றான், அவனைக் கவனித்துக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. "நான் இவ்வளவு அன்பை ஒருபோதும் உணர்ந்ததில்லை என்று உணவுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். இதற்கு முதல் வாழ்த்தாக, மைக்ரோசாஃப்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா பதிவிட்டுள்ளார். , Microsoft, OpenAIயில் பெரிதும் முதலீடு செய்துள்ளது.
சத்யா நாதெல்லா தனது பதிவில், பெற்றோர்களாக இருப்பது வாழ்க்கையின் மிக முக்கியமான மற்றும் திருப்திகரமான அனுபவங்களில் ஒன்றாகும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் பல பிரபலங்களும், பொதுமக்களும் சாம் ஆல்ட்மேனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications