சாம் ஆல்ட்மேன் என்ற பெயரை பலரும் கேள்விப்பட்டு இருக்கலாம், சிலருக்கு எங்கோ கேட்டது போல் இருக்கும், பலருக்கு இவர் யார் என்றே தெரியாமல் இருக்கும். இன்று உலகமே மிகவும் சீரியஸ் ஆக பேசி வரும் செயற்கை நூண்ணறிவு தொழில்நுட்பத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை உருவாக்கிய GPT என்ற Generative Pretrained Transformer-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்தின் தலைவர் தான் சாம் ஆல்ட்மேன்.
சமீபத்தில் சாம் ஆல்ட்மேன் அமெரிக்க நீதிமன்றத்தில் கொடுத்த பல்வேறு பதில்கள் சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை தாண்டி மனிதர்களின் தேவையை செயற்கை நுண்ணறிவு பல வகையில் குறைக்கும் வகையில் மாறும் என பயமுறுத்தியது.

இந்த நிலையில் OpenAI நிறுனத்தின் சிஇஓ சாம் அல்ட்மேன் ஞாயிற்றுக்கிழமை தனது டிவிட்டரில் 6 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார். சாம் அல்ட்மேன் இஸ்ரேல், ஜோர்டன், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், இந்தியா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இந்த வாரம் பயணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தியா உலகளவிலான AI research and development தளமாக மாறி வரும் வேளையில் OpenAI நிறுனத்தின் சிஇஓ சாம் அல்ட்மேனின் இந்திய வருகை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதிகளவிலான செயற்கை நுண்ணறிவு துறையில் திறன் கொண்ட ஊழியர்கள் இருக்கும் வேளையில் சாம் அல்ட்மேனின் வருகை முக்கியமடைந்துள்ளது.
சாம் அல்ட்மேன் எதற்காக இந்தியா வருகிறார், யாரை சந்திக்கிறார், முதலீடோ அல்லது டெக் சென்டரை அமைக்க உள்ளாரா என பல கேள்விகளை இவரின் வருகையையொட்டி எழுந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு எந்த அளவுக்கு ஆபத்து என கூறப்படுகிறதோ, அதை விடவும் பல மடங்கு நன்மை அளிக்கிறது.
இதனால் சாம் அல்ட்மேனின் இந்திய வருகை மூலம் நாட்டின் செயற்கை நுண்ணறிவு துறையின் போக்கு மாறுமா..? வேகமடையுமா..? என்ற கேள்வி அனைத்து டெக் ஊழியர்கள் மத்தியிலும் உள்ளது. சொல்லப்போனால் பல டெக் நிறுவன தலைவர்களும் சாம் அல்ட்மேன்-ஐ சந்திக்க ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications