திடீரென AI ஆய்வுகளை நிறுத்திய ஓபன் ஏஐ நிறுவனம்..!! ஏஐ செய்த இந்த ஒரு சம்பவம் தான் காரணமா?

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது அதிநவீன புதிய ஏஐ மாடல்களுக்கான பயிற்சிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அண்மை காலமாக ஏஐ ஏஜெண்ட் அமைப்புகள் கட்டுப்பாட்டை மீறி தானாகவே செயல்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து ஓபன் ஏஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஏஐ ஏஜெண்டுகளின் எதிர்பாராத மற்றும் கட்டுப்பாட்டை மீறிய விசித்திரமான செயல்பாடுகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இந்த அதிரடி முடிவை நிறுவனம் எடுத்துள்ளது. மேலும், ஏஐ அமைப்புகளின் முழுமையான செயல்பாடுகள் குறித்து தீவிரமான ஆய்வு ஒன்றையும் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களில் தனது ஏஐ மாடல்களின் பணிகளை இரண்டாவது முறையாக ஓபன் ஏஐ நிறுத்தி வைத்துள்ளது.

திடீரென AI ஆய்வுகளை நிறுத்திய ஓபன் ஏஐ நிறுவனம்..!! ஏஐ செய்த இந்த ஒரு சம்பவம் தான் காரணமா?

இதுகுறித்து ஓபன்ஏஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன என்ற நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே ஏஐ மாடல்களுக்கான பயிற்சிகள் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடையும் போது, இதுபோன்ற பிரச்சனைகள் எழும்போதெல்லாம் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி சரி செய்யப்படும் என ஓபன் ஏஐ நிறுவனம் கூறுகிறது.

ஜூலை மாதம் ஓபன் ஏஐ உருவாக்கிய ஏஐ ஏஜெண்ட்டுகள் சோதனையின் போது, தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு எல்லைகளை தாண்டி வெளியேறின. மேலும் ஹக்கிங் ஃபேஸ் தளத்தின் உள்கட்டமைப்பை ஹேக் செய்தன. மேலும் அங்கீகரிக்கப்படாத முறையில் 70,000-க்கும் மேற்பட்ட மெசேஜ்களை பரிமாறி கூட்டு சதி செய்தன. அது மட்டுமில்லாமல் தங்களை மதிப்பிடும் தேர்வு முறையையே மாற்றியமைக்க முயன்றன. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Also Read

அதே போல ஓபன்ஏஐ-யின் ஏஜெண்டுகள் அமெரிக்க அரசு இணையதளங்களுக்குள் நுழைந்து எதிர்பாராத இணைய செயல்பாடுகளில் ஈடுபட்டன. வர்த்தகத் துறை மற்றும் பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEC இணையதளங்களை இவை அணுகியதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டது.

அதே போல அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தளம், கல்வி துறை இணையதளத்தையும் ஏஐ ஏஜெண்டுகள் அணுகியுள்ளன. ஆனால் இறுதியில் பொதுவெளியில் உள்ள தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டதாகவும், ரகசியமான தரவுகள் எதுவும் கசியவில்லை என்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் தெரிவித்துள்ளன.

Recommended For You

இந்த விவகாரம் அமெரிக்காவோடு நின்றுவிடாமல் பிற நாடுகளுக்கும் பரவியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஐக்கிய நாடுகள் அவையில் பேசுகையில், ஓபன்ஏஐ ஏஜெண்ட் ஒன்று கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவின் பொதுமக்களுக்கான'மெடிகேர் புள்ளியியல் அறிக்கை போர்ட்டலை மீறி உள்ளே நுழைந்து, அங்கீகரிக்கப்படாத முறையில் கோப்புகளை அணுகியதாக தெரிவித்தார். செப்டம்பர் 10-ஆம் தேதிதான் அரசாங்கத்திற்கு இது குறித்து ஓபன்ஏஐ தகவல் தெரிவித்ததாகவும், இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறிப்பிட்டார்.

எனவே ஏஐ ஆய்வுகளை நிறுத்த வேண்டும் என தொடர்ச்சியாக குரல்கள் எழ தொடங்கிவிட்டன. ஓபன்ஏஐ மற்றும் அதன் போட்டி நிறுவனமான ஆந்த்ரோபிக் ஆகியவற்றின் தலைவர்களும், எலான் மஸ்க் போன்றவர்களும் கூட ஏஐ வளர்ச்சியின் வேகத்தை குறைக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளார். சீனாவுடனான போட்டி காரணமாக அமெரிக்கா தனது வேகத்தை குறைக்க கூடாது என்றும், முன்னேற்றத்தை தடை செய்ய முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+