உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் ஏஐ பிரிவில் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக ஏஐ துறையில் சிறந்து விளங்கும் நபர்களை அதிக சம்பளத்துக்கு வேலைக்கு எடுப்பது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை விலை கொடுத்து வாங்குவது என சிலிக்கான் வேலியே பரபரப்பாக இருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது சாட் ஜிபிடியின் ஓபன் ஏஐ நிறுவனம் புதுச்சேரிகாரரின் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 1.1 பில்லியன் டாலருக்கு விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. இது தான் தற்போது டெக் உலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது. புதுச்சேரி பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்பை முடித்தவர் தான் விஜய ராஜ். இவர் Statsig என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கின நடத்தி வந்தார் .

அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளை மேம்படுத்தி வழங்கும் நிறுவனமாக செயல்பட்டது. இந்த நிறுவனத்தை தான் தற்போது ஓபன் ஏஐ நிறுவனம் 1.1 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விஜய் ராஜ் ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயலிகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஓபன் ஏஐ நிறுவனமே இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் தன்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலமும் கிடைத்த நிபுணத்துவத்தை இங்கே பயன்படுத்தி ஓபன் ஏஐ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு விஜய் ராஜே உதவுவார் என தெரிவித்துள்ளது.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஜய ராஜே, இனி Statsig நிறுவன ஊழியர்கள் ஓபன் ஏஐ நிறுவன ஊழியர்களாக மாறுவார்கள் என கூறினார். ஓபன் ஏஐ நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வத்துடன் இருப்பதாக கூறி இருக்கும் அவர், இந்த அனுபவம் புதுமையாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
விஜய ராஜ் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் 1999 ஆம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இதனை அடுத்து மைக்ரோசாப்டில் வேலைக்கு சென்ற அவர் பத்தாண்டு காலம் அங்கே வேலை செய்துள்ளார். மைக்ரோசாப்டின் பல்வேறு தயாரிப்புகள் செயலிகளை மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றியுள்ளார். 2011ம் ஆண்டு இவர் மெடா நிறுவனத்தில் இணைந்தார். அப்போது பேஸ்புக்கில் கேமிங் பிரிவு துணைத் தலைவராகவும் எண்டர்டெயின்மென்ட் பிரிவு துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 4 ஆண்டுகளுக்கு முன்னர் சியாட்டிலை தலைமையிடமாக கொண்டு Statsig நிறுவனத்தை தொடங்கினார்.


Click it and Unblock the Notifications