உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் இதுநாள் வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மனிதர்கள் கட்டுப்படுத்தும் அளவிற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தது.
ஆனால் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு பெரிய அளவிலான மாற்றத்தை வர்த்தகம், வருவாய், யூசர் என்கேஜ்மென்ட் அளவில் பெரிய முன்னேற்றம் அடைந்தது, இதற்கு சிறிய உதாரணம் டிக்டாக். இதன் நீட்சி அல்லது உச்சக்கட்ட வளர்ச்சி தான் தற்போது உலகமே பேசி வரும் OpenAI நிறுவனத்தின் ChatGPT.
இதன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து பல துறையில் பல பிரிவில் பல சேவைகளும், தளங்களும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் OpenAI நிறுவனம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டம் என்றால் மனிதர்களுக்கு இணையாக இயங்கும், யோசிக்கும், செயல்படும், ரியல் வோல்டு விஷயங்களை புரிந்துக்கொள்ளும் ரோபோ-வை உருவாக்குவது தான்.
1X - OpenAI
இதன் பாதையில் வெற்றிகரமாக பயணித்து வரும் 1X என்னும் humanoid robot-ஐ உருவாக்கும் நிறுவனத்தில் OpenAI நிறுவனம் சுமார் 23.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.
மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் எப்படி 10 பல்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து OpenAI தொழில்நுட்பத்தை தனது Edge பிரவுசர் முதல் அனைத்திலும் பயன்படுத்தி வருகிறதோ, இதேபோல் openAI இந்த முதலீட்டின் வாயிலாக 1X நிறுவனத்தின் humanoid robot ஆன நியோ-வை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
டெஸ்லா நிறுவனம்
Humanoid Robot பிரிவில் தற்போது டெஸ்லா நிறுவனமும் இயங்கி வருகிறது, ஆனால் டெஸ்லா உருவாக்கும் இந்த ரோபோ தொழிற்துறையிலும், அலுவலகத்திலும் தினமும் மனித உழைப்பை நம்பியிருக்கும் சுத்தம் செய்தல், கனமான பொருளை தூக்குதல் போன்ற பணிகளுக்காக உருவாக்கப்படுவது.
நியோ ரோபோ
ஆனால் 1X நிறுவனத்தின் நியோ ரோபோ அப்படியில்லை மனிதர்கள் செய்யும் பல முக்கியமான பணிகளை செய்ய வல்லமை கொண்டது. 1X நிறுவனத்தின் முதல் வடிவமான EVE என்னும் ரோபோ-வின் உற்பத்தியை நார்வே மற்றும் வட அமெரிக்காவில் துவங்க உள்ளது.
இதன் பின் விற்பனையை வட அமெரிக்காவில் மட்டும் துவங்கி அதன் பின்பு உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய உள்ளது.
வீடியோ
1X நிறுவனத்தின் ரோபோ என்னவெல்லாம் செய்கிறது என்பதை இந்த வீடியோவில் பார்த்தால் உங்களுக்கு புரியும், இதுவரையில் எந்த ஒரு ரோபோவிலும் இதன் இயக்கம் இயந்திரம் போல் அல்லாமல் மனிதர்களை போல இவ்வளவு சிறப்பாக இருந்தது இல்லை.
AI பவர் கொண்ட ரோபோ
இதுவே 1X நிறுவனத்தின் பெரும் வெற்றியாக பார்க்கப்படும் வேளையில் OpenAI நிறுவனத்தின் முதலீடும், அதன் திறனும் கொடுக்கப்பட்டால் எப்படியிருக்கும்..? நினைத்து பார்க்கவே பிரம்மிப்பாக உள்ளது.
1 வருடத்தில் ரோபோ விற்பனை
இந்த நிலையில் அடுத்த 6 மாதம் முதல் 1 வருடத்தில் மனிதர்களை போலவே இயங்கும் ஒரு ரோபோ மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது, இதேபோல் 1X நிறுவனத்தில் ChatGPT உருவாக்கிய OpenAI முதலீடு செய்துள்ளதால் இதில் மைக்ரோசாப்ட் பங்கீடும் இருக்கும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications